• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் 70 பேர் காய்ச்சலால் பாதிப்பு

இலங்கை

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது பரவிவரும்  காய்ச்சலின் தாக்கம் தீவிரமாகப் பரவி வருவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் சமன் பத்திரன தெரிவித்துள்ளார்.

இதுவரை 70 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நோய் நிலைமை காரணமாக, யாழ்ப்பாணத்தில் 6 பேரும் முல்லைத்தீவில் ஒருவரும் உயிரிழந்தனர்.

இதேவேளை திடீர் நோய் நிலைமை காரணமாகச் சிலர் உயிரிழந்தமை தொடர்பில் ஆராய்வதற்காகத் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று வட மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டது.

அவர்கள் பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கரவெட்டி மற்றும் சாவகச்சேரி ஆகிய பகுதிகளில் கண்காணிப்புகளில் ஈடுபட்டதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் சமன் பத்திரன தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply