• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்கள் கசிந்த விவகாரம்-உயர் நீதிமன்றம் அறிவிப்பு

இலங்கை

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாளில் மூன்று வினாக்கள் கசிந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை அறிக்கையை நாளை காலை 9 மணிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

யசந்த கோதாகொட, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை இன்று உத்தரவிட்டுள்ளது.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் முதலாம் தாளில் மூன்று வினாக்கள் கசிந்தமைக்காக உரிய பரீட்சையை மீள நடத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு பரீட்சையில் பங்குபற்றிய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட நான்கு அடிப்படை உரிமை மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply