மக்கள் அனைவருக்கும் அரசாங்கக் கொடுப்பனவு வழங்கப்படும் என்பது பொய்
இலங்கை
பொதுமக்கள் சகலருக்கும் அரசாங்கம் கொடுப்பனவுகளை வழங்குவதாக அரசாங்க இலச்சினையுடன் கூடிய செய்தியொன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்த நிலையில் குறித்த செய்தியானது போலிச் செய்தியென செய்திகளின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் அமைப்பான Factseeker அறிவித்துள்ளது.
இவ்வாறு பகிரப்படும் செய்தியில், ‘ஒவ்வொரு வீட்டிற்கும் 50 000 ரூபா உதவித் தொகை வழங்குவதற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவிடம் Factseeker வினவிய போது, இப் பிரசுரங்கள் முற்றிலும் பொய்யானவை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
மேலும் சமூக வலைதளங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளில் பொதுமக்கள் தங்களின் தகவல்களை வழங்க வேண்டாம் எனவும் `Factseeker` வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.























