• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடிய பிரதமர் பதவி விலக வேண்டுமென ஆளும் கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை

கனடா

கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ பதவி விலக வேண்டுமென ஆளும் லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆளும் லிபரல் கட்சியைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

ஒன்றாரியோ லிபரல் கட்சியின் உறுப்பினர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கட்சித் தலைமைப் பதவியிலிருந்து ட்ரூடோ விலக வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கை கட்சிக்கு வெளியிலும் கட்சிக்கு உள்ளேயும் அதிகரித்துச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

Leave a Reply