• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிளிநொச்சியில் இனம் காண முடியாத நோய் தாக்கத்தால் ஐந்து ஏக்கர் நெற்செய்கை அழிவு

இலங்கை

இனம் காண முடியாத நோய் தாக்கத்தின் காரணமாக ஐந்து ஏக்கர் சம்பா நெற்செய்கைமுற்று முழுதாக அழிவடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கிளிநொச்சி புளியம்பொக்கனை கமநலசேவை பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை சின்னவரணி என்னும் பகுதியில் பெரும்போக சம்பா நெற்செய்கையில் ஈடுபட்டிருந்த விவசாயி ஒருவரது நெற் செய்கையில் 70 நாட்கள் கடந்த நிலையில் இத்தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இனங்கான முடியாத நோய் தாக்கம் காரணமாக ஐந்து ஏக்கர் அளவில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்த சம்பா நெற்செய்கை முற்று முழுதாக அழிந்து நீரில் கரைந்து உள்ளது.

இது தொடர்பாக எமது பகுதி விவசாய அமைப்புகள் மற்றும் கமநல சேவை திணைக்களத்தினர் வருகை தந்து எனது நற்செய்கைகக்ககு ஏற்பட்டுள்ள அழிவுக்கான காரணத்தினை கண்டறிய வேண்டும் எனவும், இந்நிலை தொடருமாயின் இனி வரும் காலங்களில் நெற்செய்கை மேற்கொள்வது மிகவும் கடினமாக அமையும் எனவும் தெரிவிக்கின்றனர்
 

Leave a Reply