அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த கிச்சா சுதீப்பின் மேக்ஸ் டிரெய்லர் வெளியானது
சினிமா
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இவர் நான் ஈ, அருந்ததி, புலி ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்து தமிழ் மக்களின் மனதில் பதிந்தார். இவர் தற்பொழுது மேக்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தில் கிச்சா ஒரு காவல் அதிகாரியாக நடித்துள்ளார். கலைப்புலி எஸ் தானு மற்றும் சுதீப் கிச்சா இணைந்து தயாரித்திற்கும் இப்படத்தை விஜய் கார்த்திகேயா இயக்கியுள்ளார். படத்தின் இசையை அஜனீஷ் லோக்நாத் மேற்கொண்டுள்ளார்.
திரைப்படத்தில் சுனில், ச்குருதா, சம்யுக்தா , வரலட்சுமி சரத்குமார் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் திரைப்படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படத்தின் கதைக்களம் ஓர் இரவில் நடக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது. டிரெய்லரின் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
திரைப்படம் தமிழ் , தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது.





















