அரச கருமங்களை உத்தியோக பூர்வமாக அரம்பிக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் ஆரம்பம்
இலங்கை
புதுவருட பிறப்பினை முன்னிட்டு அரச கருமங்களை உத்தியோக பூர்வமாக அரம்பிக்கும் நிகழ்வானது இன்று காலை கிழக்கு மாகாண ஆளுநர் செயலகதில் இடம்பெற்றது.
ஆளுநரது செயலாலர் ஜே எஸ் அருள்ராஜ் அவர்களால் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டு குறித்த நிகழ்வானது ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக “தூய்மையான இலங்கை” இலங்கைக்கு ஒரு புதிய ஆரம்பம் எனும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக அரச கடமைகளை கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் அரச அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்.






















