ஓட்டலில் துப்பாக்கி சூடு- குழந்தைகள் உள்பட 10 பேர் பலி
தென்கிழக்கு ஐரோப்பாவில், பால்கன் தீபகற்பத்தில் உள்ள நாடு மாண்டினீக்ரோ. இங்குள்ள செட்டின்ஜே நகரில் உள்ள ஒரு ஓட்டலில் துப்பாக்கி சூடு நடந்தது. 45 வயதான நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 10 பேர் உயிரிழந்தனர்.
பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவர் தனது குடும்பத்தை சேர்ந்த 7 பேரையும், ஓட்டல் உரிமையாளர் மற்றும் அவரது 2 குழந்தைகளையும் கொன்றுள்ளார். தப்பி ஓடிய அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
























