• Welcome to TamilsGuide
செய்திகள் 1

51 வயதிலும் கட்டு மஸ்தான உடலுடன் உலா வரும் மலாய்கா அரோரா

சினிமா

51 வயதில் மலாய்கா அரோரா ஒல்லியான தேகத்துடனும், கவர்ச்சிகரமான சருமத்துடனும் இருப்பதால் அவரின் டயட் சீக்ரெட் குறித்து ரசிகர்கள் விசாரித்து வருகிறார்கள்.

சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக இருப்பவர் தான் நடிகை மலாய்கா அரோரா.

இவருக்கு தற்போது 21 வயதாகிறது. இருந்தாலும் அவரின் தோற்றம் இளம் நடிகைகளுக்கும் சவால் விடும் வகையில் உள்ளது.

இது குறித்து சமூக வலைத்தளங்களில் தேடி பார்த்த போது பல ரகசியங்கள் வெளிவந்துள்ளது.

அந்த வகையில், நடிகை மலாய்கா intermittent fasting routine-னைத் தான் பின்பற்றுகிறார். இவர் தினமும் ஒரே ஒரு வேளை மட்டும் சாப்பிடுகிறார், இரவு 7.30 மணிக்குள் அந்த சாப்பாட்டை சாப்பிட்டு விடுவார்.

அதன் பின்னர் கிட்டத்தட்ட 16 டூ 18 மணி நேரம் அவரை எதையும் சாப்பிடாமல் இருப்பார். இரவில் மாத்திரம் ஒரு ஆப்பிள் அல்லது தண்ணீர் மட்டும் குடிப்பார். இதில் 16க்கு 8 என்னும் உணவு முறையை பின்பற்றுகிறார்.

இந்த உணவுத்திட்டத்தில் முதல் 8 மணி நேரத்தின் போது உணவுகளை உட்கொள்வார்கள். மீதமுள்ள 16 மணி நேரம் உணவு சாப்பிட மாட்டார்கள். ஆனால் இந்த டயட்டை பின்பற்றுவோருக்கு கலோரிகளின் எண்ணிக்கை குறையும், வளர்சிதை மாற்றம் அதிகமாகி எடை வேகமாக குறையும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

8 மணி நேரத்தின் போது சாப்பிடக்கூடிய உணவு வகைகளில் அளவு எதுவும் கிடையாது. அத்துடன் கட்டுபாடும் இல்லை என கூறுகிறார்கள்.

அந்த சமயத்தில் சத்தான உணவு, பழங்கள், காய்கறிகள், கீரைகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இடைப்பட்ட 16 மணி நேரத்திற்கு மலாய்கா அரோரா தேங்காய் தண்ணீர், ஜீரா தண்ணீர், லெமன் கலந்த தண்ணீரை எடுத்துக்கொள்கிறார். இதுவே அவரை சோர்வடையாமல் பார்த்துக் கொள்கிறது.

16 மணி நேரம் இடைவேளைக்குப் பிறகும் மலாய்கா அரோரா ஆசைப்பட்டதை எல்லாம் சாப்பிடாமல் நட்ஸ், சீட்ஸ், ப்ரூட்ஸ் என சத்தான உணவுகளை தான் எடுத்துக்கொள்கிறார். இதுவே அவர் 51 வயதிலும் கட்டுக்கோப்பான உடலில் இருப்பதற்கு காரணம்.     
 

Leave a Reply