• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் குடும்ப மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு

கனடா

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் குடும்ப மருத்துவர்கள் (Family Doctors) பற்றாக்குறை மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக ஒன்டாரியோ மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது ஒன்டாரியோவில் 25 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு குடும்ப மருத்துவர் இல்லை. இந்த எண்ணிக்கை எதிர்வரும் காலத்தில் 44 லட்சம் வரை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓய்வு பெறத் திட்டமிடும் குடும்ப மருத்துவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதே சமயம், குடும்ப மருத்துவத்துறைக்கு புதிய மருத்துவர்கள் போதுமான அளவில் வரவில்லை. குடும்ப மருத்துவர்கள் குறைவாக இருப்பது அவசர சிகிச்சை பிரிவுகளில் (ER) காத்திருக்கும் நேரம் அதிகரிக்கவும், நோய்கள் தீவிரமடையவும் காரணமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

அவசர சிகிச்சை பிரிவுகள் தான் சுகாதார அமைப்புக்கான முதன்மை நுழைவாயிலாக மாறுகின்றன.

இதனால் நீண்டகால நோய்கள் சிகிச்சையின்றி போகின்றன; தவிர்க்கக்கூடிய சிக்கல்கள் அதிகரிப்பதாக குறிப்பிடபப்டுகின்றது.

இதனால் சுகாதார அமைப்பும், அவசர சிகிச்சை பிரிவுகளும் கடும் அழுத்தத்தை சந்திப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்த நிலையை சமாளிக்க, நகராட்சிகள் மற்றும் மருத்துவமனைகள் மருத்துவர்களை தங்கள் பகுதிகளில் பணியமர்த்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 
 

Leave a Reply