பராசக்தி படத்தில் நடித்தது என் வாழ்நாள் பெருமை- சிவகார்த்திகேயன்
சினிமா
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடிப்பில் கடந்த 10-ந்தேதி திரைக்கு வந்த படம் "பராசக்தி".
டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் நிலையில் படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி கூட்டம் சென்னையில் இன்று நடந்தது.
விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது:-
படத்தை பார்த்து விட்டு குட்டி பையன் ஒருவன் தீ பரவட்டும், தமிழ் வாழ்க என்று வீடியோ அனுப்பி இருந்தான். அந்த அளவுக்கு மக்களிடம் பராசக்தி படம் சென்று அடைந்துள்ளது.
நடிப்பதற்கு சவாலான கதாபாத்திரம் என்பதால் பராசக்தியை தேர்வு செய்தேன். பராசக்தி படத்தில் நடித்தது என் வாழ்நாள் பெருமை.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் ஸ்ரீலீலா பேசுகையில், பராசக்தி படத்தில் நடித்தது ரொம்ப திருப்தியாக இருக்கிறது. என்னுடைய நடனம், பாடலுக்கு பாராட்டுகள் வருவது எனக்கு பழகிவிட்டது. பராசக்தி படம் மூலமாக முதல் முறையாக நான் நடித்த கதாபாத்திரத்திற்கு பாராட்டுகள் வருகின்றன. இது தமிழ் சினிமாவில் எனக்கு மிகச் சரியான அறிமுக படம் என தோன்றுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.






















