• Welcome to TamilsGuide
செய்திகள் 1

5 நாட்களில் உலகளவில் பராசக்தி படம் செய்துள்ள வசூல்.. 

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் பராசக்தி. இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியிருந்தார்.

மேலும் முதல் முறையாக நடிகர் ரவி மோகன் வில்லனாக நடிக்க அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தை மையமாக வைத்து இப்படத்தை எடுத்திருந்தனர். இதனால் இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. கலவையான விமர்சனங்களும் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், 5 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் பராசக்தி படம் உலகளவில் ரூ. 61 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
 

Leave a Reply