• Welcome to TamilsGuide
செய்திகள் 1

MP களுக்கான ஓய்வூதியங்களை நீக்கும் சட்டமூலம் – விதிக்கு முரணாக அமையவில்லை – உயர்நீதிமன்றம் அறிவிப்பு

இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியங்களை நீக்கும் சட்டமூலத்தில் எந்தவொரு ஏற்பாடுகளும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிக்கும் முரணாக அமையவில்லையென உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் இன்று காலை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன அறிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியங்களை நீக்கும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானங்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த சபாநாயகர் ,

அரசியலமைப்பிலுள்ள உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளது .

இதனை நான் நாடாளுமன்றத்திற்கு அறிவிக்க விரும்புகிறேன்.

இந்த சட்டமூலம் முழுமையாகவும் அல்லது அதன் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்புடன் முரண்படுவதில்லையென்பதால் அதனை நாடாளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையொன்றின் மூலம் நிறைவேற்றப்படலாம் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .

உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை இன்றைய கூட்ட நடவடிக்கைகள் பற்றிய அதிகார அறிக்கையில்
பதிப்பிட வேண்டுமென நான் கட்டளையிடுகின்றேன். என தெரிவித்தார்.
 

Leave a Reply