• Welcome to TamilsGuide
செய்திகள் 1

2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 61 தொகுதிகளை #அதிமுக கைப்பற்றியது.

தமிழ்நாடு

பின்பு நடந்த பேரவை கூட்டத்தில் கழக உறுப்பினர்கள் 60 பேரையும் சபையில் இருந்து சஸ்பெண்ட் செய்தனர்..
அதற்கு மறுநாள் 29-ஆம் தேதி மே மாதம் 2006 அன்று தனிக்காட்டு ராணியாக, தனி ஓரு மனுசியாக, சபைக்குள் சிங்கமென நுழைந்தார் நமது #இதயதெய்வம் புரட்சித்தலைவி
ஒரு நிமிடம் திடுக்கிட்டுத்தான் போனது குள்ளநரி கூட்டம்..
பேரவை வளாகத்தில் நுழைந்ததும் புரட்சி தலைவி அவர்கள், வருகைப் பதிவேட்டில் பெயரைத் தேடினார்..
‘ஜெ’ என்பதால் அகரவரிசைப்படி கடைசியில் இருந்தது. கையெழுத்துப் போட்டு உள்ளே வந்தவர், கையில் எடுத்து வந்த கேள்விகளை வரிசையாக அடுக்கினார்.
அன்றைய முதலமைச்சர் கருணாநிதி, அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, ஐ.பெரியசாமி…

- என எல்லா அமைச்சர்களும் எழுந்து, எழுந்து பதில் சொல்லும் அளவுக்கு கேள்விக் கணைகளால் புரட்டி எடுத்தார் புரட்சி தலைவி...
அம்மா அவர்களை தொடர்ந்து பேசவிடாமல் செய்யும் சூழ்ச்சியை கையாண்டார்கள் குள்ளநரி கூட்ட அமைச்சர்கள்...
ஆனாலும் எரிச்சல் அடையாமல் கேள்விகளை எழுப்பினார்.
கோபப்படுத்தும் 'சொல்" ஒன்றை அன்பழகன் உதிர்த்தபோதும் கூட, அம்மா அமைதியாகவே தனது உறையை தொடர்ந்தார்.
"விரைவில் பேச்சை முடியுங்கள்" -என்று பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் சொல்ல,
"இன்னும் பேச வேண்டியவை நிறைய இருக்கின்றன" என்று புரட்சி தலைவி பதில் அளிக்க,
"கடைசிப் பக்கத்தை எடுத்து வாசிங்க…" - என்று ஆவுடையப்பன் கிண்டலடிக்க...
சற்றும் கோபப்படாமல் தெளிந்த நீரோடை போல, அமைதியாக தொடர்ந்து பேசிய போதுதான் அம்மாவின் பண்பாடு தெரிந்தது..
அன்று கடைசியாக பேசி உரையை முடிக்கும் போது அம்மா சொன்னது "திமுக-வுக்கு சாவு மணி அடிப்பேன்" என்று...
அது தான் இந்த தமிழகத்தின் திமுக-வின் கடைசி ஆட்சியாக அமைந்தது..
அதன் பின் 'திமுக-விற்கு சாவு மணி அடிக்கப்பட்டது மட்டும் அல்ல சமாதியே கட்டப்பட்டது' என்ற வரலாற்றை இந்த தமிழகம் அறியும்..
2026-ஆண்டும் இந்த வரலாறே தொடர வேண்டுமாயின் நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டு, வஞ்சகர்களின் சூழ்ச்சி வலையில் விழாமல் களமாடி 'வெற்றிக்கனியை இதயதெய்வம் அம்மாவின் காலடியில் சமர்பிப்போம்' புரட்சித் தமிழர் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்களை முதலமைச்சரின் அரியணையில் அமர வைப்போம் என அயராது உழைப்போம் என உறுதி ஏற்போமாக...!
என்றும் மக்கள் பணியில்:
அஇஅதிமுக,
கூடலூர் நகர கழகம்,
தேனி கிழக்கு மாவட்டம்,
கூடலூர். 

 

Leave a Reply