• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் குழு மோதலில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் கைது

இலங்கை

யாழ்ப்பாணம் , இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற குழு மோதலில் இரு இளைஞர்கள் காயமடைந்த நிலையில், மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரியவிளான் மற்றும் பண்டத்தரிப்பு பகுதிகளை சேர்ந்த இரு இளைஞர்களுக்கு இடையிலான தனிப்பட்ட தகராறு நிலவி வந்த நிலையில் நேற்றைய தினம் இருவருக்கும் ஆதரவாக இரு கும்பல்கள் மோதிக்கொண்டன.

பொலிஸ் நிலையத்தை அண்மித்த பகுதியில் இரு குழுக்கள் மோதி கொள்வதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து , பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த வேளை மோதலில் ஈடுபட்டவர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.

தப்பி சென்றவர்களில் ஒருவரை பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன் , தப்பி சென்றவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிசிச்சை பெற்று வரும் நபர்களிடமும் வாக்கு மூலங்களை பதிவு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 

Leave a Reply