எம்ஜிஆருக்கு பாட்டு எழுதியதால்தான் பிரபலம் ஆனேனா? வாலி சொன்ன பதில் இதுதான்!
சினிமா
எம்ஜிஆருக்கு பாடல் எழுதியதன் காரணமாகத்தான் திரையுலகில் மிகப்பெரும் புகழ் அடைந்தேனா? என்ற கேள்விக்கு வாலி அளித்த பதிலை கீழே விரிவாக காணலாம்.
தமிழ் சினிமா இருக்கும் வரையில் எப்போதும் போற்றப்படக்கூடியவர்களாக இருப்பவர் எம்ஜிஆர். தமிழில் வணிக சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாராக கொடிகட்டிப் பறந்தவர். பின்னாளில் அரசியலில் ஈடுபட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் பதவி வகித்தவர்.
எம்ஜிஆருக்கு பாட்டு எழுதியதால்தான் வாலிக்கு பெருமையா?
இவரது படங்களுக்கு பல பாடல்களை எழுதிய பெருமை வாலியைச் சேரும். எம்ஜிஆருக்கு அறிமுகப் பாடல், அரசியல் அர்த்தங்கள் கொண்ட பாடல் என பல பாடல்களை எழுதியவர் மறைந்த கவிஞர் வாலி.
வாலியும், சோ-வும் பங்கேற்ற நேர்காணல் ஒன்றில் எம்ஜிஆருக்கு பாடல் எழுதியதால்தான் வாலி மிகப்பெரிய அளவில் வந்தாரா? என்ற கேள்வியை சோ-விடம் கேட்பார்கள். அப்போது, சோ பதில் கூறுவதற்கு முன்பு பதிலளித்த வாலி,
வாலி சொன்ன பதில்:
என்ன பாடல் எழுதியிருந்தாலும் எம்ஜிஆரின் கரிஷ்மாதான் அந்த பாடலின் வெற்றிக்கு காரணம். நான் ஆணையிட்டால் அப்படி என்றால், எம்ஜிஆரே ஒரு கட்சிப் பின்னணி கொண்டவர். ஏற்கனவே அவருக்கு மக்கள் மத்தியில் ஒரு கரிஷ்மா உள்ளது. ஏழைப்பங்காளர் என்றும் உள்ளது.
என்னதான் நடக்கும் நடக்கட்டுமேஇருட்டினில் நீதி மறையட்டுமேதன்னாலே வெளிவரும் தயங்காதேஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
சிவாஜியும் பாடலாம்.
ஆனால், மூன்று எழுத்தில் என் மூச்சு இருக்கும் அவருக்கு பொருந்தாதே. நான் செத்துப் பொழச்சவன்டா அவர் பாட முடியாதே.
விரயம்:
பாட்டு எந்த உதடுகளில் போய் உட்கார்கிறது என்பது முக்கியம். இல்லாவிட்டால் விரயம் ஆகிவிடும். விஸ்வநாதனின் இசை, செளந்தர்ராஜனின் அற்புதமான குரல், நம்ம வரிகள் என ஆயிரம் இருக்கலாம். நிறைய செலவு பண்ணி வின்சென்ட் கேமராவில் நாகிரெட்டி எடுத்திருக்கலாம்.
இது அத்தனையும் இருந்து அந்த இடத்தில் எம்ஜிஆர் இல்லாவிட்டால், சோ சொன்ன மாதிரி பாடல் ஹிட் ஆகியிருக்கும். ஆனால், 50 சதவீதம்தான் வெற்றி பெற்றிருக்கும்.
அதேபோல, யாரை நம்பி நான் பொறந்தேன் என்று சிவாஜி சொல்லலாம். வேறு நடிகர் சொன்னால் எங்களை நம்பிதான் நீ பொறந்த போடா என்று சொல்லிவிடுவார்கள்.
இவ்வாறு வாலி கூறியிருப்பார்.
எம்ஜிஆரின் வெற்றிப்பாடல்கள்:
எம்ஜிஆரின் புகழ்பெற்ற வெற்றி மீது வெற்றி வந்து, ஆடலுடன் பாடலைக் கேட்டு, பச்சைக்கிளி முத்துச்சரம், அழகிய தமிழ்மகள், என்னைத் தெரியுமா, புதிய வானம், நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, நல்ல நல்ல பிள்ளைகளை என பல வெற்றிப்பாடல்களை எம்ஜிஆருக்காக வாலி எழுதியுள்ளார். எம்ஜிஆரின் திரைப்பட வெற்றிக்கு வாலியின் வரிகளும் மிகப்பெரிய பக்கபலமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழச்சி கயல்விழி
























