நெய்வேலியில் நிலத்துக்கடியில் கனிமவளம் இருப்பதை கண்டறிந்தார் ஓர் விவசாயி..
சினிமா
நெய்வேலியில் நிலத்துக்கடியில் கனிமவளம் இருப்பதை கண்டறிந்தார் ஓர் விவசாயி. வெள்ளையர் ஆட்சிக்கு தகவல் தந்தார். விடிவில்லை. முதல்வர் ராஜாஜியிடம் முறையிட்டார். ஒன்றும் நடக்கவில்லை. காமராஜர் முதல்வரானதும் நேரில் சென்று தகவல் சொன்னார். உடனடியாக பொறியாளர் ஒருவரை அழைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டார் முதல்வர். மிக விரிவான, விஞ்ஞான பூர்வமான திட்ட அறிக்கையை தயாரித்து தமிழக அரசிடம் ஒப்படைத்தார். தில்லி சென்று பிரதமர் நேருவிடம் நெய்வேலி திட்டம் பற்றி பேசினார். காகிதங்களை புரட்டியவர் கையை விரித்தார். "இதெல்லாம் சாத்தியமில்லை.."
"ஆய்வு செய்து இந்த அறிக்கையை தயாரித்தவர் அனுபவமுள்ள ஒரு பொறியாளர். இந்த திட்டத்தை மறுக்க இரண்டு காரணங்கள்தான் உள்ளன.
ஒன்று இந்த நாட்டில் பொறியியல் படிப்பு தரமாக இல்லை. அல்லது இதையெல்லாம் புரிந்து கொள்ளும் தகுதி அரசியல்வாதிகளான நமக்கு இல்லை.."
கேம்ப்ரிட்ஜில் படித்த அறிவாளியை கிழிகிழியென கிழித்துப் போட்டார் கைநாட்டு பேர்வழி, கை சுத்தம்.. பிரதமராவது, பெரிய தலைவராவது ..
அடுத்தமுறை பொறியாளருடன் நேருவை சென்று சந்தித்தார், விளக்கினார். முதலீடு 150 கோடி என்றார்
"திட்டம் ஓகே.. நிதியில்லையே.. தமிழக அரசு நடத்தலாம்..."
"அரசின் ஆண்டு வருமானம் 150 கோடி .. எங்களால் எப்படி...."
"நிலக்கரியை வெளியே கொண்டுவர மூன்றாண்டுகள் ஆகும்" என்கிறார். "ஆண்டுக்கு 50 கோடி போடுங்க..."
முடிவெடுத்தார் தமிழக முதல்வர் தமிழர் காமராசர். என்ன ஒரு மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம். தமிழ்நாடுதானே காமராசருக்கு குடும்பம்.
1954 ல் 50 கோடி ஒதுக்கினார். பணிகள் தொடங்கப்பட்டன. அடுத்த வருடம் 50 கோடி.
1956 ல் கடைசி தவணையைக் கொடுத்துவிட்டு தவிக்க தொடங்கினார். இதை செய்தோம் அதை செய்தோம் என்று தேசநலன்களை குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் விற்றுவிட்டு அடுத்தமுறை ஆட்சி கிடைக்குமா கிடைக்காதா என்ற இன்றைய அரசியல்வாதிகளின் கவலையல்ல.
மக்கள் வரிப்பணமாச்சே.. மத்திய அரசு கேள்வி கேட்குமே... சுரங்கப் பணிகள் முடிவடைந்து, நிலக்கரியை வெட்டியெடுத்து வெளியே கொண்டு வரும் நாளில்....
முதல்வர் நெய்வேலி வந்தார். சுரங்கத்தில் நின்றார்.
அதோ..
நீரும் நிலக்கரியும் கலந்து வழியும் கனிம வளத்தை தலையில் சுமந்தபடி தொழிலாளிகள் வருகின்றனர். ஓடினார் முதல்வர்....
தமிழ் மண்ணின் வளம்.. தமிழர் நலம் அல்லவா தலையிலிருந்து கறுப்பு தங்கமாக வழிகிறது.. தாவியணைத்தார் அந்த தொழிலாளியை... கரியை அள்ளி கைகளால் முகர்ந்தார். ஆனந்த கூத்தாடினார். வெள்ளை கதர் சட்டை , கறுப்பாகி மின்னியது.
இன்று ஆண்டுக்கு லாபம் 2000 கோடிகள்...
இப்படியும் ஒரு மாமனிதர் இவரன்றி பிறந்ததுமில்லை இனி பிறக்க போவதுமில்லை. ஆனால் இருக்கும் வரை அவர் அருமை தெரியவில்லை.
Paranji Sankar























