• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கல்முனை கல்வி வலய நிர்வாக மற்றும் முகாமைத்துவ சேவை அதிகாரிகள் ஓய்வு

இலங்கை

கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் ஏ. முகம்மட் ஆரிப் அவர்கள் 35 வருடங்களாக அரச சேவையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். அதேபோன்று, முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஏ.எம். ஜவ்பர் அவர்கள் 28 வருட சேவைக்குப் பின் ஓய்வு பெற்றுள்ளார்.

இரு அதிகாரிகளுக்கும் கௌரவமாக ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாவிடை நிகழ்வு கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபிர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டுஇ ஓய்வு பெறும் அதிகாரிகளின் நீண்டகால அர்ப்பணிப்பையும் நேர்மையான சேவையையும் பாராட்டிப் பேசினார். அவர்களின் சேவை கல்வித் துறைக்கு அளித்த பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும் எனக் குறிப்பிட்டார்.

நிகழ்வில் கணக்காளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட அலுவலக உத்தியோகத்தர்கள் பங்கேற்று, தங்களது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம். ரியாசத் அவர்கள் ஓய்வாளர்களை வாழ்த்தி சிறப்புப் வாழ்த்துப்பா வினை வடித்து வாசித்தார். இந்த நிகழ்வின் நிறைவாக, ஓய்வு பெற்ற அதிகாரிகள் இருவரும் பொன்னாடை போர்த்தி, பொற்கிழி வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அவர்களின் ஓய்வு வாழ்க்கை ஆரோக்கியத்துடனும் அமைதியுடனும் அமைய அனைவரும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
 

Leave a Reply