• Welcome to TamilsGuide
செய்திகள் 1

 நம்நாடு பத்திரிக்கை.......

சினிமா

இரா.நெடுஞ்செழியன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு நடத்தப்பட்டது. கலைவாணர் NSK அவர்கள் மறைந்த செய்தியை 30.08.1957 இதழ் முதல் பக்கத்தில் வெளியிட்டது. 31.08.1957 இதழானது கலைவாணர் அனுதாப இதழாக வெளிவந்தது. கலைவாணர் அவர்கள் மருத்துவமனையில் இருக்கும்போது இரவு 8.00 மணி அளவில் அறிஞர் அண்ணா அவர்கள் அவரை சந்தித்தார். அண்ணா அவர்கள் கலைவாணர் அவர்களை காண மட்டுமே முடிந்தது. உரையாட முடியவில்லை. அறிஞர் அண்ணாவைக் கண்டதும் மதுரம் அம்மா அவர்கள் அழுத காட்சி அனைவரையும் சோகத்தின் எல்லைக்கே கொண்டு சென்றுவிட்டது. அண்ணா மருத்துவமனைக்கு சென்றபாேது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், கே.ஆர். ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.வி.நாராயணசாமி, எம்.ஆர்.ராதா, டி.கே.சண்முகம், பகவதி சந்திராபாபு, எம்.ஜி.ஆர் அவர்களின் அண்ணன் சக்கரபாணி ஆகியோர் கலைவாணர் அவர்களின் உடல்நிலையைக் கண்டு கண்கலங்கிய நிலையில் நின்றனர். அன்று இரவு வானொலியில் இரா.நெடுஞ்செழியன் அவர்கள் கலைவாணர் அவர்கள் பணி குறித்து 30 நிமிடங்கள் உரையாற்றினார். இவை 67 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வுகள் இருப்பினும் பழைய இதழ்களை காணும்போது கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள் வாழ்ந்த உன்னத வாழ்க்கை நினைவுக்கு 
வருகிறது...🙏

Chandran Veerasamy.

Leave a Reply