• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிவாஜி கணேசனை வேண்டாம் என்று சொன்னவர் பின்னாளில்....

சினிமா

சிவாஜி கணேசனை வேண்டாம் என்று சொன்னவர் பின்னாளில் அவரை கட்டிப்பிடித்து பிறவி நடிகன் என்று சொன்னார்.

திரைப்படத் துறையில் பெரிய மேதையான ஏவிஎம் செட்டியார் அவர்கள் பற்பல கலைஞர்களை உண்டாக்கியவர், அவரே, ‘ஏம்பா இந்தப் புது பையனை போட்டு விஷப்பரிட்சை செய்கிறீர்கள்.

கே ஆர் ராமசாமி அல்லது டி ஆர் மகாலிங்கம் போன்றவர்களை நடிக்கச் சொல்லி பராசக்தி படத்தை முடியுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

அதே ஏவிஎம் செட்டியார் பிற்காலத்தில் ‘அந்த நாள்’ படம் எடுக்கும் போது “ஏன்பா” மற்றவர்களை போட்டு விஷப்பரிட்சை செய்கிறீர்கள். சிவாஜியை வைத்து எடுங்கள் என்றார். ஏவிஎம் செட்டியார் அவர்கள் இந்த நிகழ்ச்சியை அவரது வாழ்க்கை புத்தகத்தில் எழுதியுள்ளார்.

‘பராசக்தி’ படத்தின் போது சிவாஜியின் நடிப்பு திறமை தெரியாது. அதனால அப்படி கூறினேன். இப்பொழுது தெரிந்து கொண்டேன்” என்று பெருந்தன்மையுடன் குறிப்பிட்டுள்ளார்!.

Prashantha Kumar

Leave a Reply