• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜிக்ரி தோஸ்த் வெளியானது தலைவரின் புண்ணியத்தில்..

சினிமா

மாட்டுக்கார வேலன் மாபெரும் வெற்றிப்படம் ஹிந்தியில் "ஜிக்ரி தோஸ்த்" என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படம். தமிழில் ஜெயந்தி பிலிம்ஸ் தயாரிப்பில் மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிக்கப் போகிறார் என்று தெரிந்ததும் ஹிந்தி படத்தின் வால்போஸ்டரில்.

ஜிக்ரி தோஸ்த் என்று போட்டு விட்டு தமிழ் மாட்டுக்கார வேலன் என்று கீழே போட்டதும் அதை பார்ப்பதற்கு எம்ஜிஆர் ரசிகர்களாகிய நாங்கள் அனைவரும் கிளம்பி விட்டோம்.

சின்ன சின்ன ஊர்களில் கூட "ஜிக்ரி தோஸ்த்" வெளியானது தலைவரின் புண்ணியத்தில். அதே நேரத்தில் "பிரம்மசாரி" என்ற ஹிந்தி படத்தின் உரிமையை J R. மூவிஸ் தென்காசி P K V சங்கரன் ஆறுமுகம் வாங்கி வைத்திருந்தார்கள். தமிழில் எம்ஜிஆர் கால்ஷீட்டிக்காக காத்திருந்தவர்கள் திடீரென்று சிவாஜியை வைத்து "எங்க மாமா" என்ற பெயரில் படமெடுக்க ஆரம்பித்து விட்டனர். அந்த கம்பெனியின் பெயரே ஜானகி ராமச்சந்திரன் என்ற பெயரின் முதல் எழுத்தில் உள்ள J R. ஐ இணைத்து J R மூவிஸ் என்ற பெயரில் தொடங்கப் பட்ட கம்பெனி. அவர்கள் கூட பார்ட்னராக இருந்த கனகசபை செட்டியார் நான் தனியாக எம்ஜிஆரை வைத்து படம் எடுத்து கொள்கிறேன் என்று ஆரம்பிக்க பட்ட கம்பெனி தான் ஜெயந்தி மூவிஸ். அவர்கள் எடுத்த முதல் படம்தான் "மாட்டுக்கார வேலன்". ஆனால் இரண்டு கம்பெனியின் படங்களும் ஒரே நாளில் மோதும்படி ஆகி விட்டது..

"ஜிக்ரி தோஸ்த்" ஹிந்தி. படத்தை பார்த்தும் எங்களுக்கெல்லாம் திருப்தி ஏற்படவில்லை. இந்த படம் எப்படி தமிழுக்கு எம்ஜிஆருக்கு மேச் ஆகும் என்று நாங்கள் கவலைப்பட ஆச்சரியமாக திரைக்கதையை தலைவருக்கு தகுந்த படி மாற்றி வசனத்தை A L நாறாயணனிடம் ஒப்படைத்தார்கள். அவர் காமெடியுடன் வசனத்தை எழுத தியேட்டரே V K ராமசாமி பேசும் வசனத்தில் அதிர, போதாக்குறைக்கு தலைவரும் காமெடியில் கலக்க பாடல்கள் K V மகாதேவன் இசையில் ஜொலிக்க அதுவும் டைட்டில் சாங் சத்தியம் நீயே தர்மத்தாயே பாடலே

சொல்லி விட்டது வெற்றியின் வீரியத்தை . இரண்டு படங்களும் ஒரே நாளில் மோதியதால் எந்த படம் வெற்றி பெறும் என்பதில் ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள்.

V K R பேசும் மாட்டுக்கொட்டகையில் என்ன அதிசயம்? மறுபடியும் ஏசுநாதர் பிறந்துட்டாரா? அன்னபூரணி பொட்டும் பூவுமா காஞ்சிபுரம் பட்டுமா போன்ற வசனங்கள், அசோகன் பேசும் வசனங்கள் , என்னடா சொல்லுறான் அவன் வக்கீல் வீட்டுக்கு போகணும்னு சொல்றான் பாஸ், வேண்டாம் டாக்டர் வீட்டுக்கு அனுப்பு குடுக்கிற உதை எடுக்கிற ஒவ்வொரு ஜன்மத்துக்கும் ஞாபகம் இருக்கணும், யோவ் வக்கீல் நீ சட்டத்தை படிச்சிருக்கே! நான் கரைச்சு குடிச்சிருக்கேன்! இது போன்ற வசனங்கள் படத்திற்கு விறுவிறுப்பூட்டி படத்தை பாமர மக்களும் ரசிக்கும்படியாக மாற்றி ஒரு பிரமாண்ட வெற்றியை ரசிகர்களுக்கு தேடித்தந்தார்கள். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இடம் பெற்ற புதுமையான கம்புச்சண்டை ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்கே அழைத்து சென்றது எனலாம்.

படத்தில் ஒளிப்பதிவு மட்டும் கொஞ்சம் டல்லாக காணப்பட்டது.அதற்கு பிரிண்ட் போடும் நேரத்தில் பவர்கட் பிரச்னை இருந்தது என்றார்கள். படம் தீபாவளிக்கே தயாராக இருந்தும் நம்நாடு படத்துக்காக பொங்கல் வரை காத்திருந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றார்கள்.

தலைவர் படம் வெற்றியடைந்தால் முதலில் சந்தோஷப்படுவது ரசிகர்கள்தான்.

ஓபனிங் ஷோ பார்த்ததும் தெரிந்து விட்டது படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று. "எங்க வீட்டு பிள்ளை" க்கு பிறகு மீண்டும் இந்த படத்தில்தான் மறுபடியும் அடுத்த காட்சிக்கு ரசிகர்கள் முண்டியடிப்பதை பார்த்தேன். அடுத்த நாள் கூட்டம் முதல்நாளைக் காட்டிலும் இரண்டு மடங்கு இருந்தது.

அனைவருக்கும் தெரிந்தது இது ஒரு வெள்ளிவிழா படமென்று. மாட்டுக்கார வேலன் கூட வந்த" எங்க மாமா" வின் ரிசல்டை அறிய ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாக இருந்தார்கள். படத்தை பார்த்த சிவாஜி ரசிகர்கள் முகம் ஒளி வீசவில்லை மாறாக இருண்டு காணப்பட்டது. "மாட்டுக்கார வேலனு"க்கு தினமும் மாட்டு வண்டியிலும் லாரிகளிலும் வந்து குவிந்தபடி இருந்தனர் ரசிகர்கள். வாகனங்கள் நிறுத்த இடமில்லாமல் பல ரோடுகளை மறித்து நிறுத்தி இருந்தார்கள். அதற்கு பிறகு இப்போது வரை அதுபோல் ஒரு வாகன அணிவகுப்பு நான் கண்டதில்லை.

தூத்துக்குடியில் படம் திரையிட்ட நாளிலிருந்து இறுதி வரை தினசரி 3 சனி,ஞாயிறு 4 காட்சிகள் நடைபெற்ற ஒரே படம். எந்த காட்சியையும் குறைக்காமலே 76 நாட்கள் ஓடியது. ஆனால் எங்க மாமா 15 நாட்கள்தான் ஓடியது. திருநெல்வேலியில்

140 நாட்கள் ஓடியது. சென்னையில் நான்கு தியேட்டரிலும் தொடரந்து 100 காட்சிகள் அரங்கம் நிறைந்து நான்கு தியேட்டரிலும் 100 நாட்களை தாண்டி பிராட்வேயில் 176 நாட்கள் ஓடி வெற்றி முத்திரை பதித்தது. "எங்க மாமா" சென்னையில் 50 நாளாவது ஓடியதா என்பது என் நினைவில் இல்லை. "மாட்டுக்கார வேலன்" என்ற காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட "மாமா" எங்காவது கரையேறினாரா என்று தெரியவில்லை. "ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு" என்பதை மெய்யாக்கும் வண்ணம் ஜேயார் மூவிஸார் அவசரப்பட்டு சிக்கலிடம் சிக்கி கொண்டார்கள்.

"என் அண்ணன்" வெளியீட்டை தள்ளி வைத்திருந்தால் நிச்சயம் நெல்லையில் முதல் வெள்ளிவிழா படமாக "மாட்டுக்கார வேலன்" அமைந்திருக்கும். மதுரையிலும் சென்னையிலும் வெள்ளி விழாவை பதிவு செய்தது. 5 தியேட்டரில் வெள்ளி விழா காண வேண்டிய படம் 2 தியேட்டரோடு நின்று விட்டது என் அண்ணன் வருகையால்.

பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட அடிமைப்பெண்ணின் வெறறிக்கு இணையான வெற்றியை குறைந்த செலவு செய்து எடுக்கப்பட்ட மாட்டுக்கார வேலன் பெற்றது எனலாம். இவ்வளவு பெரிய வெற்றியை பார்த்ததும் கனகசபை செட்டியார் உடனே அடுத்த படமான "ராமன் தேடிய சீதை" படத்துக்கு பூஜையை போட்டார்.🙏ரஜனி film institute ல் படிக்கும்பொழுது இந்த climax stunt scene காமித்து பாடம் நடத்தினார்கள் என்று ஒரு பேட்டியில் படித்த ஞாபகம்.

நன்றி நடிகப்பேரரசர்..

Leave a Reply