• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகர் திலகத்தின் தனது தொழில் மீதான அர்ப்பணிப்பு குறித்து இயக்குனர் ஏ.பி.நாகராஜன் 

சினிமா

நடிகர் திலகத்தின் தனது தொழில் மீதான அர்ப்பணிப்பு குறித்து இயக்குனர் ஏ.பி.நாகராஜன் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது...

திருவருட் செல்வர் படத்தின் படப்பிடிப்பு காலை 5 மணி படப்பிடிப்பிற்கு 4 .45 க்கே அரசன் வேடத்தோடு படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விட்டார் சிவாஜி..

இயக்குனரோ அண்ணே உங்களுக்கு படப்பிடிப்பு 6.30 மணிக்குத் தான் அதுவரை பத்மினியை வைத்து மன்னவன் வந்தானடி பாடல் நடன காட்சி படமாக்க வேண்டியுள்ளது அதில் நீங்கள் கம்பீரமாய் ஒரு ராஜ நடையோடு உள்ளே வர வேண்டும்...அது வரை பொறுத்திருக்க சொல்லி ...குஷன் ஸ்டைலில் ஷோபா போன்ற இருக்கையில் அமரச் சொன்னார் இயக்குனர்... சிவாஜியோ அந்த இருக்கைக்குப் பதில் இரும்பு நாற்காலியை கொண்டு வரச் சொல்லி தன் காட்சி வரும் வரை அதில் அமர்ந்திருக்கிறார்...இயக்குனருக்கு ஒன்றும் புரியவில்லை... ஏன் இந்த நாற்காலி என்று கேட்டதற்கு ..பத்மினி நடனத்தின் அபிநயங்க ளால் அசத்திவிடுவார்...என் பங்கிற்கு ஏதாவது செய்வதற்கு இது டூயட் கூட கிடையாது... ஒரு நடையிலேயே நான் பத்மினியை மிஞ்ச வேண்டும் இந்நிலையில் நான் ஷோபாவில் அமர்ந்தால் உடல் குளைவு ஆகி கம்பீரம் , தோரணை, விறைப்பு எல்லாம் போய்விடும் என்று சொல்லி 2 மணி நேரம் அந்த சேரிலேயே முதுகு குனியாது நிமிர்ந்து நேராக அமர்ந்திருந்து நடந்தது தான் அந்த மன்னவன் வந்தானடி பாடல் நடை..
 

Leave a Reply