• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் - 6 லட்சம் வீடுகள் இருளில்

அமெரிக்காவின் வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக, 6 இலட்சத்திற்கும் அதிகமான வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மின்சாரமின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடும் பனிப்புயல் காரணமாக வடகிழக்கு அமெரிக்காவின் பல பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதில் 6,00,000-க்கும் மேற்பட்ட நுகர்வோர் இருளில் மூழ்கியுள்ளனர். அத்துடன் மசாசூசெட்ஸ் மாநிலம் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது.

இங்கு சுமார் 3,00,000 நுகர்வோர் மின்சாரமின்றி உள்ளனர். குறிப்பாக, கேப் கோட் (Cape Cod) மற்றும் அதன் சுற்றுப்புறங்களை உள்ளடக்கிய பார்ன்ஸ்டபிள் (Barnstable) கவுண்டியில் 85% நுகர்வோருக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

மேலும் நியூ ஜெர்சி மாநிலத்தில் சுமார் 1,25,000 வீடுகள் மற்றும் நிறுவனங்கள் மின்சாரத்தை இழந்துள்ளன.

அத்துடன் டெலாவேர் (Delaware) மற்றும் ரோட் தீவு (Rhode Island) ஆகிய மாநிலங்களும் இந்தப் பனிப்பொழிவினால் மின் தடையைச் சந்தித்துள்ளன.

Leave a Reply