நம் வள்ளல் அவர்களுக்கு ஆரம்பகாலத்தில் டூப் வேடம் போட்டவர் மாடக்குளம் அழகர்சாமி.
சினிமா
தாழம்பூ படத்தில் ஒரு சண்டை காட்சியில் அவருக்கு கால் ஒடிந்து விட அவருக்கு பிறகு அந்த வாய்ப்பு சரவணா பிலிம்ஸ் வீ.ஜி.வேணு மூலம் மகாலிங்கம் என்பவருக்கு கிடைக்கிறது...
ஒருமுறை புதியபூமி பட சண்டை காட்சியில் மேசை முழுவதும் அசைவ உணவு வகைகள் நிரம்பி இருக்க சண்டை போது அது வீணாகி கீழே சிதற...
எல்லாம் வீணா போச்சே நம் வீட்டுக்கு கொண்டு போய் இருந்தாலும் பிள்ளைகள் சாப்பிடுமே என்று அவர் வருந்த தலைவர் காதுகளில் விழுந்த அந்த செய்தி மகாலிங்கம் அவர் சார்ந்த நடிகர்கள் வீடு திரும்பிய போது அனைத்து மட்டன் வகைகளும் அவர்கள் வீட்டில் நிரம்பி வழிந்தன.
ஒளிவிளக்கு படப்பிடிப்பு முடிந்து மன்னன் வீடு திரும்பி கொண்டு இருக்க பழைய சன் திரையரங்கம் வழியாக வீட்டுக்கு கோடம்பாக்கம் பாலம் வழியே நடந்து மகாலிங்கம் நடந்து கொண்டு சென்று இருக்க வள்ளல் தன் காரை நிறுத்தி என்ன கம்பெனி கார் இல்லயா சரி ஏறு என்று சொல்லி அவர் வீட்டில் விட்டு 2000 ரூபாய் கையில் கொடுத்து போக.
சாலி கிராமத்தில் சொந்த வீடு அப்போது வாங்க அள்ளி கொடுத்த வள்ளல் அவர்களால் எங்கள் குடும்பம் இன்றும் சிறப்புடன் வாழ்கிறது.
சிலவற்றை சொல்ல முடியாது என்கிறார் மகாலிங்கம் அவர்கள் மகன் ராஜப்பா.





















