சினிமாவில் எழுத்தாளர் சுஜாதா செய்த பங்களிப்புகள்
சினிமா
அனைவரையும் தனது எழுத்தால் ஈர்த்த சுஜாதா திரைத்துறையில் மிகப்பெரிய பங்களிப்பை செய்திருக்கிறார். அதுகுறித்த பார்வை
இலக்கியத்தில் பலரும் அறிவியலை தொட யோசித்துக்கொண்டிருந்த சூழலில் எழுத்தாளர் சுஜாதா அதை மிக எளிதாக செய்துகாட்டியவர். அறிவியல் மட்டுமின்றி அவரது எழுத்தில் நகைச்சுவை உணர்வும், டைமிங்குகள் அதிக அளவு இருந்தன. அதனால் அவரால் அனைத்து தரப்பு வாசகர்களையும் ஈர்க்க முடிந்தது.
ஸ்ரீரங்கத்து தேவதை ரங்கராஜன் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் 1935ஆம் ஆண்டு மே மூன்றாம் தேதி பிறந்தவர் ரங்கராஜன். ஸ்ரீரங்கத்தில் இருக்கும் ஆண்கள் உ யர்நிலைப் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்த பிறகு திருச்சியில் இருக்கும் புனித ஜோசப் கல்லூரியில் பிஎஸ்சி இயற்பியில் பட்டம் பெற்றார். அதன் பிறகு எம்ஐடியில் மின்னணு பொறியியல் படித்தார். படிப்பை முடித்து அரசு பணி செய்தாலும் எழுத்தின் மீது அவருக்கு தீராத ஆர்வம் இருந்தது.
எழுத்தாளர் சுஜாதா பிறந்த கதை தொடர்ந்து எழுத ஆரம்பித்தவர், ரா.கி.ரங்கராஜன் என ஏற்கனவே ஒரு எழுத்தாளர் இருந்ததால் பெயர் குழப்பத்தை போக்குவதற்கு தனது தனது மனைவி பெயரான சுஜாதா என்ற புனைபெயரில் சிறுகதைகள், நாவல்கள் எழுத ஆரம்பித்தார். எழுத்து என்றால் வெறும் புனைவு மட்டும் அல்ல. அவரது எழுத்தில் அறிவியல் குறித்தும் அறிந்துகொள்ளலாம்; கலை குறித்தும் அறிந்துகொள்ளலாம். ஒருகட்டத்தில் சுஜாதா எழுதாத பத்திரிகைகள் இல்லை என்ற நிலை உருவானது.. 1953ஆம் ஆண்டு ஆரம்பித்த அவரது எழுத்து பயணம் பல வருடங்கள் நீண்டன.
திரைத்துறையில் சுஜாதாவின் பங்களிப்பு இலக்கியத்தில் மட்டும் கோலோச்சாமல் திரைத்துறையிலும் தனது பங்களிப்பை திறம்பட செய்தார் சுஜாதா. குறிப்பாக அவர் எழுத ஆரம்பித்த சில வருடங்களிலேயே அவரது நாவல்கள் திரைப்படமாகின. அந்தவகையில் சுஜாதா எழுதிய காயத்ரி என்ற நாவல் 1977ஆம் ஆண்டு அதே பெயரில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடிப்பில் உருவானது. படத்தை பட்டாபிராமன் இயக்கியிருந்தார். இந்தப் படம் போதிய வரவேற்பை பெற்றது.
அதகளம் செய்த சுஜாதாவின் ப்ரியா அதனையடுத்து சுஜாதா எழுதிய ப்ரியா என்ற கதை அதே பெயரில் ரஜினியின் நடிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் படமாக உருவானது. இந்தப் படம்தான் சிங்கப்பூரில் ஷூட் செய்யப்பட்ட முதல் தமிழ் திரைப்படமாகும். இந்தப் படம் ரஜினியின் திரைவாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களில் ஒன்றாகும்.
மேலும், சுஜாதா எழுதிய கரையெல்லாம் செண்பகப்பூ, 24 ரூபாய் தீவு கதை (திரைப்படம்: ஒன்டித்துவலி கன்னடம்), காகிதச் சங்கிலிகள் என்ற அவரது கதை பொய் முகங்கள் என்ற பெயரிலும் உருவாகின.
அதிநவீனத்தை முதல்முறை புகுத்திய சுஜாதா, கமல் இதனையடுத்து சுஜாதா எழுதிய விக்ரம் என்ற கதை அதே பெயரில் படமாக்கப்பட்டது. இருப்பினும் இதில் திரைக்கதை எழுத்தாளராகவும் அவதாரம் எடுத்தார் எழுத்தாளர் சுஜாதா. இந்தப் படம் ராக்கெட் கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. அதுவரை தமிழ் சினிமா அப்படி ஒரு கதைக்களத்தை கண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வசனகர்த்தாவான சுஜாதா
எழுத்தாளர்,திரைக்கதை எழுத்தாளர் என வலம் வந்த சுஜாதா மணிரத்னத்தின் ரோஜா படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமானார். மணிரத்னத்தின் பல்ஸை புரிந்துகொண்டு அவருக்கேற்றவாறு ரத்தின சுருக்கமாக வசனங்கள் கொடுப்பதில் சுஜாதா கில்லாடி. ரோஜா படத்தின் வசனங்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற அதன் பிறகு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத வசனகர்த்தாவானார் சுஜாதா.
அப்படி அவர் வசனம் எழுதிய முதல்வன், இந்தியன், திருடா திருடா, உயிரே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்த எழுத்து, அந்நியன், பாய்ஸ், சிவாஜி, எந்திரன் என பல படங்கள் மெகா ஹிட்டாகின.
சுஜாதா என்றால் பிரமிப்பு குறிப்பாக முதல்வன் படத்தில் அர்ஜுனுக்கும், ரகுவரனுக்கும் நடக்கும் பேட்டி காட்சி, இந்தியன் படத்தில், வெளிநாட்டில் கடமையை மீறுவதற்குத்தான் லஞ்சம்; இங்கு கடமையை செய்வதற்கே லஞ்சம், அந்நியன் படத்தில் விக்ரம் பேசும் வசனங்கள் என பல படங்களில் பல ஜானர்களில் அவர் எழுதிய வசனங்கள் இன்றுவரை பிரமிப்பை கொடுக்கக்கூடியவை.
.
ரோபோ எந்திரனாக மாறிய கதை
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து ப்ளாக்பஸ்டர் ஹிட்டான எந்திரன் படம் முதலில் ரோபோ என்ற பெயரிலேயே உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் அப்போதைய தமிழ்நாடு அரசு தமிழில் திரைப்படங்களுக்கு பெயர் வைத்தால் வரிவிலக்கு என்று அறிவித்ததை அடுத்து ரோபோவுக்கு சரியான தமிழ் பெயர் கிடைக்காமல் திண்டாடியிருக்கிறது படக்குழு. அந்த சமயத்தில் விஷயத்தை கேள்விப்பட்ட சுஜாதா உடனடியாக எந்திரன் என்ற பெயரை ஷங்கருக்கு பரிந்துரைத்திருக்கிறார். அந்தப் பெயர் பொருந்திப்போக ரோபோ எந்திரனாக மாறியது. இன்றுவரை எந்திரன் என்ற பெயர் மிகப்பெரிய பிராண்டாக இருக்கிறது. அதற்கு காரணமான எழுத்தாளர் சுஜாதா
புன்னகை மன்னன்






















