இதை செஞ்சா உங்களுக்கு நல்லது.. ஜெயலலிதா சரோஜா தேவிக்கு கொடுத்த அலார்ட்!!
சினிமா
கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என தமிழ்நாட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சரோஜா தேவி. அவர் நடித்த பல படங்கள் வரிசையாக ஹிட்டடித்தன. இதன் காரணமாக அந்த காலத்து லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்துகொண்டிருந்தார். சிவாஜி, எம்ஜிஆர் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிக்கொண்டவர் சரோஜா தேவி.
அவர் கன்னட சினிமாவில்தான் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு தேசிய விருதை பெற்றுக்கொடுத்தது. கன்னடம், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என சுற்றி சுழன்று நடித்தார் அவர். தனது கண்களாலேயே பல பாஷைகள் பேசுபவர்தான் அவர் என்று ரசிகர்களும், திரைத்துறையினரும் எப்போதும் சொல்வார்கள். அதுமட்டுமின்றி நடிகைகளில் பெரும்பாலானோர் எப்படியாவது சரோஜா தேவி போல் மாறிவிட வேண்டுமென்றுதான் ஆசை கொண்டிருக்கிறார்கள்.
கேரக்டர் ரோல்கள்: வயது ஏற்றம் காரணமாக ஹீரோயினாகும் வாய்ப்பு குறைந்ததால்; கேரக்டர் ரோலை ஏற்றார். அப்படி சில படங்களில் நடித்த அவர்; கடைசியாக கடந்த 2009ஆம் ஆண்டு ஆதவன் படத்தில் நடித்தார். அதற்கு பிறகு ஒட்டுமொத்தமாக சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர்; வயது மூப்பு காரணமாக சில உடல் நல குறைவுகளையும் சந்தித்தார். அதற்கான சிகிச்சையும் தவறாமல் எடுத்துவந்தார்.
சரோஜா தேவி அளித்த அந்தப் பேட்டியில், "ஜெயலலிதா முதலமைச்சர் ஆன பிறகும்கூட என்னை பலமுறை அழைத்து பேசியிருக்கிறார். எங்கள் இரண்டு பேருக்குமிடையே நல்ல நட்பு இருக்கிறது. நிறைய முறை ஜெயலலிதாவை நான் சந்தித்திருக்கிறேன். என்னிடம் ரொம்பவே நல்ல முறையில் பழகுவார். அடிக்கடி என்னை பார்க்க வேண்டும் என்று விரும்புவார். நான் நடித்த புதிய பறவை படம்தான் அவருக்கு ரொம்பவே பிடித்த படம்.
ஒருமுறை ஜெயலலிதாவை சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம், 'நீங்கள் இப்போது டாப்பில் இருக்கிறீர்கள். அந்த இடத்திலிருந்து எந்த காரணத்துக்காகவும் கீழே இறங்காதீர்கள். சின்ன சின்ன வேடங்களுக்கு எல்லாம் ஓகே சொல்லிவிடாதீர்கள்.நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்களோ கடைசிவரைக்கும் அப்படியே இருக்க வேண்டும் என அக்கறை காட்டினார்" என்றார்.






















