• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காதல் குறித்து பேசிய நடிகை மிருணாள் தாகூர்.. 

சினிமா

மிருணாள் தாகூர் இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் Dacoit. இப்படம் இதுவரை ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை மிருணாள் தாகூர் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வருவதை நாம் அறிவோம். இந்த நேரத்தில் அவர் பிரபல நடிகர் தனுஷை காதலிக்கிறார் என்றும், இருவருக்கும் விரைவில் திருமணம் என்றும் வதந்திகள் பரவின. ஆனால், இதனை மிருணாள் தாகூர் முற்றிலும் மறுத்துவிட்டார். இதன்பின், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

சமீபத்திய விழா ஒன்றில் பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், நடிகை மிருணாள் தாகூர் ஒரு தெலுங்கு நடிகரை திருமணம் செய்துகொண்டு இங்கேயே செட்டிலாகிவிட வேண்டும் என கூறியிருந்தார். அவருடைய பேச்சு இணையத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பேட்டி ஒன்றில் நடிகை மிருணாள் தாகூரிடம் காதல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "இப்போது காதலிக்க நேரமில்லை" என கூறியுள்ளார். காதல் குறித்து மிருணாள் தெரிவித்துள்ள கருத்து தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply