• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பயணிகள் தனியார் பேருந்தில் மண்ணெண்ணெய் கடத்தல்

இலங்கை

வெல்லவாய பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, கொழும்பிலிருந்து மொனராகலை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றிலிருந்து 100 லீற்றர் மண்ணெண்ணெய் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பேருந்தில் மண்ணெண்ணெய் கடத்தப்படுவதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேருந்தின் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 

Leave a Reply