அம்மா என்று அழைப்பதா? -சுருதிஹாசன் கோபம்...
சினிமா
கமல்ஹாசன் மூத்த மகளான சுருதிஹாசன் நடிகை, பாடகி, இசை அமைப்பாளர் என்ற பன்முகங்களை கொண்டவர். தமிழ் திரை உலகில் மட்டுமின்றி இந்தி திரை உலகிலும் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சுருதிஹாசன் நேற்றுமுன்தினம் மும்பை ரெஸ்டாரண்ட் ஒன்றில் இருந்து வெளியே வந்தார்.
புகைப்பட கலைஞர்கள் சூழ்ந்து கொண்டு போட்டி போட்டு புகைப்படம் எடுத்தனர். அப்போது புகைப்படக்காரர் ஒருவர் சுருதிஹாசனை பார்த்து ‘அம்மா...’ என்று அழைத்தார். இந்த வார்த்தையை கேட்ட சுருதிஹாசன் ‘யார் உங்களுக்கு அம்மா, என்ன உளருகிறீர்கள்?’ என்று கோபத்துடன் கேள்வி எழுப்பினார்.
இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுருதிஹாசனுக்கு ஆதரவாக பலரும் பதிவிட்டு வருகின்றனர்.























