நிறைமாத கர்ப்பம், ரஜினிக்கு வில்லியாக நடித்த எம்.ஜி.ஆர் பட நடிகை; இந்த படம் சூப்பர் ஹிட் ஆச்சு
சினிமா
சிவாஜி நடிப்பில் கடந்த 1974-ம் ஆண்டு வெளியான வாணி ராணி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். எம்.ஜி.ஆருடனும் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லி மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடித்துள்ள நடிகை ஒய்.விஜயா, கர்ப்பமாக இருக்கும்போது ரஜினிக்கே வில்லியாக நடித்துள்ளார். அந்த அனுபவம் குறித்து அவர் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.
சிவாஜி நடிப்பில் கடந்த 1974-ம் ஆண்டு வெளியான வாணி ராணி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் ஒய்.விஜயா. அதன்பிறகு கமல்ஹாசனுடன் மன்மதலீலை படத்தில், பைரவி என்ற முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். தொடர்ந்து மூன்றுமுடிச்சு, எம்.ஜி.ஆருடன் நவரத்தினம், ரஜினிகாந்த் முதன் முதலில் நாயகனாக நடித்த பைரவி படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். பெரும்பாலும் இவர் நெகடீவ் கேரக்டரில் தான் அதிகம் நடித்துள்ளார்,
அந்த வகையில், 1989-ம் ஆண்டு வெளியான ராஜாதி ராஜா திரைப்படத்தில், ரஜினிக்கு வில்லியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்தபோது அவர் கர்ப்பமாக இருந்துள்ளார். இது குறித்து பேசியுள்ள ஒய்.விஜயா, படப்பிடிப்பு சமயத்தில் ரஜினி சார் மற்றும் படக்குழுவினர் அனைவரும் நல்லபடியாக பார்த்துக்கொண்டார். மற்றவர்களிடுடம் என்னை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள்' என்று சொன்னார்கள். ஏனென்றால், அப்போது அவர்கள் ஒவ்வொரு நாளையும் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
ஒருவேளை நாங்கள் அப்படிச் சொல்லவில்லை என்றால், நேரம் போய்விடும், காத்திருக்க வேண்டியிருக்கும். அந்த நேரத்தில் அவர்களைக் கூப்பிடாதீர்கள், 'நான் மதியம்தான் வருவேன்' என்று சொல்வார். அதனால் அவர்களுக்கு இரண்டு முறை அழைப்பு (Call) போய்விட்டது. ரஜினி சாருடன் 'நல்லவனுக்கு நல்லவன்', 'தனிக்காட்டு ராஜா' போன்ற படங்கள் பண்ணினேன். பிரசவம் ஆகி ஒரு மாதத்தில் நடிக்க வந்துவிட்டேன். தெலுங்கில் போலீஸ் ஸ்டோரி படப்பிடிப்பின் போது பிரசவம் ஆகி ஒரு வாரம்தான் ஆகிறது, வர முடியாது' என்று சொன்னேன்.
அதற்கு அவர், 'இல்லை மா, நீங்கள் ஒரு நாள் திருப்பதிக்கு வந்துவிட்டு, அப்படியே வேலையை முடித்துவிட்டுப் போங்கள். அதன்பிறகு 3 மாதங்கள் கழித்து தான் ஷூட்டிங் என்று சொன்னார். என் அப்பாவும் அம்மாவும் என்னுடன் இல்லை, அவர்கள் ஊரில் இருந்தார்கள். என்னுடைய கணவர் கொடுத்த தைரியம்தான் நான் படங்களில் நடிக்க காரணம். அவர்கள் கூடவே இருந்ததுதான் எனக்குப் பெரிய பலம், இன்று வரை அதே ஆதரவுதான் கிடைக்கிறது என்று ஒய்.விஜயா கூறியுள்ளார்.
தேன்மொழி






















