• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மே தினத்துக்கு முன் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் மாற்றங்கள்

இலங்கை

மே தினத்திற்கு முன்னதாக மக்கள் ஆதரவைப் பெறும் நோக்கில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தில் மாற்றங்களை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

மே 1 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி, தற்போதைய ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தைக் கலைத்துவிட்டு, ஒரு மக்கள் முடிவாக புதிய வாரியத்தை நியமிக்கக்கூடும் என்று அறிக்கைகள் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், இந்த ஆண்டு ஐக்கிய மக்கள் சக்தி மிகப்பெரிய பேரணியை நடத்தும்.

அதேநாளில் பௌர்ணமி பண்டிகை வருவதால் ஐக்கிய மக்கள் சக்தி, தனது மே தின நடவடிக்கைகளை ஒரு பேரணியுடன் மட்டுப்படுத்திக் கொள்ளும் என்றும், அணிவகுப்புகள் அல்லது பிற கொண்டாட்டங்களை நடத்தாது என்றும் மரிக்கர் கூறினார்.

புதிய இடைக்கால கிரிக்கெட் நிர்வாகத்தில் முன்னாள் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. எரன் விக்ரமரத்னவுக்குப் பதவி வழங்கப்படலாம் என்ற செய்திகள் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த மரிக்கர், தாம் அந்த ஊடகச் செய்திகளைப் பார்த்ததாகவும், ஆனால் தமக்கு அது தொடர்பில் உறுதியான தகவல் எதுவும் இல்லை என்றும் கூறினார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தில் மாற்றங்களைச் செய்ய அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும், உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும் பல உள்ளூர் ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply