• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஹட்டன் டிக்கோயா பகுதியில் கனமழை காரணமாக 50 எஸ்டேட் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது

இலங்கை

ஹட்டன் டிக்கோயா பகுதியில் கனமழை காரணமாக 50 எஸ்டேட் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் ஹட்டன்-டயகம பிரதான வீதி ஊடான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

நேற்று பிற்பகலில் ஹட்டன் டிக்கோயா பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக, டிக்கோயா ஃபோர்டைஸ் எஸ்டேட்டின் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள 50 எஸ்டேட் வீடுகள் முற்றிலும் நீரில் மூழ்கியுள்ளன.

ஹட்டன்-ஃபோர்டைஸ்-டயகம வீதியின் ஊடான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் பொலிசார் தெரிவித்துள்ளது.

எஸ்டேட் வழியாக காஸ்ட்லரே நீர்த்தேக்கத்திற்குள் பாயும் டிக்கோயா கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக எஸ்டேட் வீடுகளும் பிரதான வீதியும் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

நீரில் மூழ்கியுள்ள வீடுகளில் வசிக்கும் சுமார் 50 குடும்பங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் தற்பொது இடம்பெயர்ந்துள்ளதாகவும், இடம்பெயர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply