நிலக்கரி இறக்குமதி விவகாரம் குறித்த ஆணைக்குழுவின் விசாரணை ஆரம்பம்
இலங்கை
கடந்த 2009ஆம் ஆண்டு தொடக்கம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரிக்கான விலைமனு கோரலின்போது இடம்பெற்ற ஊழில் மோசடிகளை ஆராய்வதற்காக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, தமது விசாரணைகளை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழு அலுவலகம் கொழும்பில் உள்ள புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்கவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக, மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பத்தபெண்டி மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ சோமரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் நிலக்கரி மூலம் மின்சார உற்பத்தி செயல்முறை தொடங்கியதிலிருந்து 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தொடர்பாக ஆராயப்படவுள்ளது.
தனியார் நிறுவனம் அல்லது அதனை சார்ந்த நிறுவனங்களால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட் ட நிலக்கரி மற்றும் மின்சார உற்பத்தியில் ஏதேனும் முறைகேடுகள் அல்லது சட்டவிரோத செயல்கள் உள்ளிட்ட மேலும் பல விடயங்களை ஜனாதிபதி ஆணைக்குழு ஆராயவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






















