• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பெண் என் ஆசை பாழானது ஏனோ?...

சினிமா

எஸ்_ஜானகி அவரது அரிய சாதனைகள், குழலினும் சுகமான, அமுதினும் அமுதான குரலில் எஸ்.ஜானகி பாடிய பல்லாயிரக்கணக்கன பாடல்களில் சில பாடல்களைமுதலில் சுவைப்போம் வாருங்கள்.. 1957ம் ஆண்டில் வெளிவந்த விதியின் விளையாட்டு படத்தில், ’பெண் என் ஆசை பாழானது ஏனோ?’ என்ற பாடல்தான் கானக்குயில் எஸ்.ஜானகியின் முதல் பாடல். பாடிய பாடல் என்னவோ நெகடிவ் சென்டிமென்ட் பாடல் ஆனால் ஜானகியின் பாடல் ஆசை போதும் போதும் என்ற அளவிற்கு அவர் வாழ்வில் நிரம்பியது. 1962ம் ஆண்டு எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையில் கு.மா.பாலசுரமணியம் எழுதிய ’சிங்கார வேலனே தேவா..’ என்ற பாடலை ஜானகியின் குரலில் கேட்டதும் மனதுக்குள் ஒரு அமைதி பிறக்கும். ’கொஞ்சும் சலங்கை’ படத்தில் இப்பாடல் இடம்பெற்றது. ஆபேரி ராகத்தில் இப்பாடல் அமைக்கப்பட்டது. முறைப்படி கர்நாடக இசையை கற்றதால் எல்லா ராகங்களும் அவரது நாவின் நுனியில் தாண்டவ மாடியது. சிறுவயதில் பாடல் ஞானத்துடன் இருந்த எஸ்.ஜானகி நாதஸ்வர மேதை பைடிசாமி என்பவரிடம் முறைப்படி இசை கற்றுத் தேர்ந்தார். தெலுங்கு பிராமணர் குடும்பத்தில் பிறந்த ஜானகி ஆந்திராவின் குண்டூர் மாவட்டம் பள்ளபட்லா என்ற ஊரில் ராமமூர்த்தி, சத்யவதி ஆகியோருக்கு மகளாக 1938ம் ஆண்ட
ு ஏப்ரல் 23ம் தேதி பிறந்தார். ஆந்திராவிலிருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்து வந்த எஸ்.ஜானகி ஏவிஎம் ஸ்டுடியோவில் ஒப்பந்த அடிப்படையில் சேர்ந்து திரைப்பட துறையில் நுழைந்தார். ஏற்கனவே குறிப்பிட்டபடி 1957 ஆண்டு அவர், ’விதியின் விளையாடு’ படத்தில் பாடிய வுடனே மறுநாளே தெலுங்கு படத்தில் பாட வாய்ப்பு வந்தது. ’எம்.எல்.ஏ’ என்ற படத்தில் கண்டசாலாவுடன் ’நீயாசா அடியா..’ என்ற பாடல் பாடினார். அதன்பிறகு எஸ்.ஜானகி யின் கொடி உயர பறக்கத் தொடங்கியது. தொடர்ந்து 25 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, கொங்கினி, துளு, சவுராஷ்டிரம், வங்களம், சமஸ்கிரதம், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பத்தாயிரத்துக்கும் அதிகமான பாடல்கள் பாடினார். கணவர் ராம் பிரசாத் மறைந்த நிலையில் தற்போது மகன் முரளி கிருஷ்ணாவுடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். சென்னை மற்றும் சொந்த ஊரிலும் அவர் அவ்வப்போது சென்று வசிக்கிறார். அவருக்கு தற்போது 82 வயது ஆகிறது. எஸ்.ஜானகி இதுவரை 4 முறை தேசிய விருதுகள் பெற்றிருக்கிறார். அது பற்றி பின்னர் விரிவாக பார்க்கலாம். அவர் பாடிய பல பாடல்கள் கல்லின் மேல் எழுத்தாக பதிந்தி ருக்கிறது. அதில் சிலவற்றை பார்த்தாலே அவரின் பெரு
மை என்ன என்பது தெரிய வரும். கவிஞர் கண்ணதாசன் எழுதிய, ’பூஜைக்கு வந்த மலரே வா..’ பாடலை எம்.எஸ்.விஸ்வ நாதன் டி.கே.ராமமூர்த்தி இசையில் ’பாத காணிக்கை’ படத்திற்காக 1962ம் ஆண்டு பாடினார். அதே ஆண்டு ’சுமைதாங்கி’ பி.பி.ஸ்ரீனிவாஸுடன் ’எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில் என்ன..’, ’ஆலயமணி’ படத்தில், ‘தூக்கம் உன் கண்களை. ’போலீஸ் காரன் மகள்’ படத்தில், ’இந்த மன்றத்தில் ஓடிவரும்..’ ஆகிய பாடல்களை பாடினார். இவையெல்லாவற்றுக்கும் எம்.எஸ்.வி, டி.கே.ராமமூர்த்தி இரட்டையர்கள்தான் இசை அமைப்பாளர்கள். பாடலை கண்ணதாசன் எழுதியிருந்தார். 1963ம் ஆண்டு ’நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் பி.பி.ஸ்ரீனிவாஸ் உடன் இணைந்து ’அழகுக்கும் மலருக்கும்..’ பாடலை பாடினார். இந்த பாடலுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார். 1965ம் ஆண்டு ’திருவிளையாடல்’ படத்தில் ’பொதிகை மலை உச்சியிலே..’ பாடலை பி.பி.ஸ்ரீனிவாஸுடன் இணைந்தும், 1969ம் ஆண்டு ’அடிமைப்பெண்’ படத்தில், ’காலத்தை வென்றவன்’ பாடலுக்கு பி.சுசீலா வுடனும் இணைந்தும் எஸ்.ஜானகி பாடினார். இப்பாடலுக்கு கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். 1970ல் ’என் அண்ணன்’ படத்தில், ’நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்’ பாடலை டி.எம்.சவுந்திரராஜனுடன் இணைந்து பாடினார். ’எங்கிருந்தோ வந்தாள்’ படத்தில் எம் எஸ் வி இசையில், ’வந்தவர்கள் வாழ்க மற்றவர்கள் வருக’ பாடலை தனித்துப் பாடினார். இப்பாடல்களில் இசை அமைப் பாளர், பாடகர்கள் மாறினாலும் பாடல்களை எழுதியவர் கண்ணதாசன்தான் . 1973ம் ஆண்டு, ’பொண்ணுக்கு தங்க மனசு’ படத்தில், ‘தஞ்சாவூர் சீமையிலே..’ பாடலை முத்துலிங்கம் எழுத பி.எஸ்.சசிரேகா, சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோருடன் இணைந்து பாடினர். ஜி.கே.வெங்கடேஷ் இசை அமைத் தார். 1974ம் ஆண்டு, ’அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் எம்.எஸ்.வி இசையில் கண்ணதாசன் எழுதிய, ’கண்ணிலே என்னவுண்டு’ பாடல் பாடிய ஜானகி. 1976ம் ஆண்டு ’அன்னக்கிளி’ படத்தில் இளையாராஜா இசை அமைத்த முதல் படத்தில் ’மச்சான பாத்தீங்களா..’ என்ற பாடிய பாடல் பட்டி தொட்டி எங்கும் துவம்சம் செய்து வெளுத்து வாங்கியது. பாடலை பஞ்சு அருணாச்சலம் எழுதினார். 1976ம் ஆண்டு ’உறவாடும் நெஞ்சம்’ படத்தில், ’ஒரு நாள் உன்னோடு..’ பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் இணைந்து பாடினார். இளையாராஜா இசை அமைத்தார். அடுத்து, ’அவர்கள்’ படத்தில் மீண்டும் எம்.எஸ்.வி இசைக்கு, ’காற்றுக்கென்ன வேலி’ பாடலுக்கு குரல் கொடுத்தார். கண்ணதாசன் பாடல் எழுதினார். 1977ம ஆண்டு, ’கவிக்குயில்’ படத்தில் இளையராஜா இசையில், ’குயிலே கவிக் குயிலே ..’ பாடல் பாடினார். 1978ல் ’அச்சாணி’ படத்தில் கவிஞர் வாலி எழுதிய ’மாதா உன் கோயிலில்..’ பாடிய ஜானகி மீண்டும் வாலி எழுத்தில் அதே ஆண்டில் ’சிகப்பு ரோஜாக்கள்’ ’நினைவோ ஒரு பறவை..’ பாடலை கமலுடன் இணைந்தும் பாடினார். இப்பாடலுக்கு இசை அமைத்ததும் இளையராஜாதான். மீண்டும் 1978ல் இளையராஜா இசையில் ’பிரியா’ படத்தில் பஞ்சு அருணாச்சலம் எழுதிய, ’ஏ பாடல் ஒன்று ராகம்..’ பாடலை கே.ஜே.யேசு தாஸுடன் இணைந்து பாடினார். 1979ம் ஆண்டு ’தர்மயுத்தம்’ படத்தில் ’ஆகாய கங்கை பாடலை..’ மலேசியா வாசுதேவன் உடன் பாட எம்.ஜி.வல்லபன் பாடலை எழுதியிருந்தார். ’தர்மயுத்தம்’ படத்திற்கு இளையராஜா இசையில் அவர் பாடிய ’ஆகாய கங்கை பூந்தேன்..’ என்ற பாடலை இப்போது கேட்டாலும் மனம் இனம்புரியாத ஒரு இன்பத்தில் லயித்துத்தான் போகும். அத்துடன் சேர்ந்து ஒலிக்கும் ராஜாவின் இசை மனதுக்குள் ஊடுருவும். 1980ம் ஆண்டு இளையராஜா இசையில் மலேசிய வாசுதேவனுடன் இணைந்து ’மூடுபனி’ படத்திற்காக ’பருவகாலங்களின் கனவு நெஞ்சில்..’ என்ற பாடலைப் பாடினார். அதே ஆண்டு ’ஜானி’ படத்தில் மீண்டும் ராஜா இசையில் கங்கை அமரன் எழுதிய, ’காற்றில
் எந்தன் கீதம்..’ பாடலைப்பாடி அடுத்த பல வருடங்களுக்கான பாடலை பதிவு செய்தார். 1981ம் ஆண்டு ’கிளிஞ்சல்கள்’ படத்தில் டி.ராஜேந்தர் எழுதி இசை அமைத்த, ’விழிகள் மேடையாம்’ பாடலை டாக்டர் கல்யாண் உடன் இணைந்து பாடினார். இந்த அலை என்றைக்கும் ஓயாது என்பதுபோல் மற்றொரு கானம் காற்றைக் கிழித்துக்கொண்டு 1981ம் ஆண்டுவந்தது. 16 வயதினிலே, கிழக்கேபோகும் ரயில், சிவப்பு ரோஜாக்கள் என பாரதிராஜா, இளையராஜா இசையில் அடுத்து படங்கள் வெற்றி பெற்றநிலையில் ஒரு படம் சறுக்கி யது. உடனே இவர்கள் இருவரின் அலையும் ஒய்ந்துவிட்டது என்று திரையுலகில் அரசல் புரசலாக பேசத் தொடங்கினார். இது இரண்டு ராஜாக்களின் காதிலும் விழுந்தது. கடலில் அலை ஒய்வதில்லை என்பதுபோல் எங்கள் கூட்டணியும் ஓயாது என நிரூபிக்க முடிவு செய்தனர். புதிய களம் அமைக்கப்பட்டது. அலைகள் ஒய்வதில்லை என்று படத்துக்கு டைட்டில் முடிவானது. கார்த்திக், ராதா என்ற இளசுகளை ஜோடி சேர்த்தனர். கதைக் கருவும் சாதி பாகுபாடுக்கு சவுக்கடி கொடுக்கும் வலுவான களம். கிளைமாக்ஸில் ஒரு அதிர்ச்சியை ரசிகர்களுக்கு தரவேண்டும் என்று முடிவு செய்துகொண்டு படத்தின் ஆரம்பம் முதல் ஜாலியான பசங்க விளையாட் டாக காட்சிகள் அமைத்து அதில் 
ஒரு காதலை மொட்டுவிட வைத்து அதை வேறருக்க தியாகராஜன் என்ற நடிகரை வில்லனாக களம் இறக்கினர். அஸ்திவாரம் பலமாக அமைக்கப் பட்டபோதே வெற்றியின் வீச்செ என்ன வென்று தெரிந்தது. இத்தனை ஏற்பாடு களுடன் இயற்கையின் ஆணிவேரை எழுது கோலாக கொண்ட வைரமுத்து உள்ளே வந்தார். இசையும் பாடலையும் காற்றோடு காறாக கலக்கச் செய்ய எஸ்.ஜானகி என்ற கான சரஸ்வதியும் இந்த கூட்டணியில் கைசேர்த்தார். 1981ம் ஆண்டு ’அலைகள் ஓய்வதில்லை’ திரைக்கு வந்து ஒரு பெரிய வரலாறு படைத்தது. அதில் இடம் பெற்ற அத்தனை பாடல்களும் ஹிட். குறிப்பாக எஸ்.ஜானகி எஸ்..பி.பியுடன் இணைந்து பாடிய , ’ஆயிரம் தாமரை மொட்டுக்களே..’ சூப்பர் ஹிட்டா னது. இந்த கூட்டணியின் அலை ஓயாது என்று நிரூபிக்கப்பட்டது. பாரதிராஜாவுக்கும், இளையாராஜவுக்கும் மட்டுமல்ல தமிழ் படத்திற்கு மற்றொரு விடியலாக இப்படம் அமைந்தது. இப்பாடலை தமிழில் தேன் குழைத்து எழுதி இருந்தார் வைரமுத்து."

Natesan Natesan

Leave a Reply