• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கடல்சார் நட்புறவை வலுப்படுத்தும் இலங்கை – இந்தியா

இலங்கை

கொழும்பில் நடைபெற்று வரும் 4 ஆவது நீர்மூழ்கிப் பயிற்சியின் போது, ​​இந்தியாவும் இலங்கையும் தங்களது கடற்படைக் கூட்டாண்மையை வலுப்படுத்தின.

எக்ஸ் தளத்தில் ஒரு பதிவில் இது தொடர்பான விவரங்களைப் பகிர்ந்துகொண்ட இந்திய கடற்படையின் செய்தித் தொடர்பாளர், கொழும்பில் நடைபெற்று வரும் 4 ஆவது இந்தியா-இலங்கை நீர்மூழ்கிப் பயிற்சி, வலுவான கடல்சார் ஒத்துழைப்பையும் தொழில்முறை தோழமையையும் மேலும் வலுப்படுத்துகிறது – என்று கூறினார்.

இந்திய கடற்படையின் ‘INS NIREEKSHAK’ போர்க்கப்பல், (Mixed Gas Diving Training) திட்டத்தை நடத்துவதற்காக  கடந்த 21 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தது.

போர்க்கப்பல் இலங்கையில் தங்கியிருக்கும் போது, அதன் குழுவினர் இலங்கை கடற்படையுடன் இணைந்து (Mixed Gas Diving Training) திட்டத்தை நடத்துவார்கள். 

இது இரு நாடுகளின் சுழியோடி துறைகளுக்கு இடையே அனுபவப் பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாட்டிற்கான ஒரு வாய்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே நல்லெண்ணத்தையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார்கள். 

அத்துடன், கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களுக்கும் அவர்கள் பயணம் மேற்கொள்ளவும் உள்ளனர்.
 

Leave a Reply