ரத்த தானம் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வழக்கு
2010-ல் இந்த புகைப்படத்தில் காணப்படும் நேஹா என்ற பெண் காணாமல் போகிறார்.
பின்னர், அந்த பெண் தனது வீட்டிற்கு அருகிலிருந்த காட்டில் இருந்து கண்டுபிடிக்கப்படுகிறார்.
போஸ்ட்மார்டம் செய்ய அனுப்பப்பட்டபோது, நேஹா பாலியல் வன்முறைக்கு உள்ளாகி, பெரிய கல்லால் தலையில் அடித்து கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
ஆனால் போலீசாருக்கு கிடைத்த ஒரே ஆதாரம் குற்றவாளியின் விந்து (sperm) மட்டுமே. பல ஆண்டுகள் விசாரணை நடந்தும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை.
அப்படியே 12 ஆண்டுகள் கழித்து, அதே காட்டில் மற்றொரு பெண்ணும் அதே முறையில் கொலை செய்யப்படுகிறார். அங்கும் கிடைத்த ஒரே ஆதாரம் sperm தான்.
அதை நேஹா வழக்கில் கிடைத்த ஆதாரத்துடன் ஒப்பிட்டு பார்த்தபோது, அது பொருந்தியது. இருந்தும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை.
அதற்கு பிறகு 3 மாதங்கள் கழித்து, இன்னொரு பெண் கொலை செய்யப்படுகிறார்.
அப்போது போலீசாருக்கு ஒரு சந்தேகம் வருகிறது — அந்த காட்டின் அருகில் ஒரு டாக்ஸி ஸ்டாண்ட் உள்ளது.
டாக்ஸி டிரைவர்களில் யாராவது இருக்கலாம் என்று நினைத்து, எல்லாரையும் தனித்தனியாக விசாரிப்பது பயனில்லை என்று உணர்ந்த போலீசார், அங்கு ஒரு ரத்ததான முகாம் நடத்துகிறார்கள்.
அந்த பகுதியில் இருந்த டிரைவர்களும், மற்றவர்களும் சேர்த்து சுமார் 800 பேரிடமிருந்து ரத்தம் சேகரிக்கப்படுகிறது.
இறுதியில், மோனுகுமார் என்ற ஒருவரின் DNA உடன் அது பொருந்துகிறது.
அவர் கைது செய்யப்படுகிறார். மேலும் விசாரணையில், முன்பு ஒரு சிறுமியை கொன்ற வழக்கும் அவருக்கு எதிராக இருந்தது தெரிய வருகிறது.
ஆனால் அப்போது போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். அப்போது சரியான தண்டனை கிடைத்திருந்தால், இவ்வளவு பெண்களின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும்…























