• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நிதி அமைச்சின் செயலாளர் இல்லத்திற்கு முன்பாக புதிய மக்கள் முன்னணியினர் போராட்டம்

இலங்கை

திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மூன்றாம் தரப்பினரால் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவிற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட ‘புதிய மக்கள் முன்னணி ‘ கட்சியின் ஆதரவாளர்கள் குழுவினர் இன்று (28) காலை பெலவத்தை, அகுரேகொட பகுதியில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றிருந்தனர்.

அங்கு அப்பிரதேச மக்களினால் சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட சிலரது மீது சாணத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில் இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதோடு, நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
 

Leave a Reply