வாகனக் காப்பீட்டுக் கடன் காலம் 30 நாட்களாக குறைப்பு
இலங்கை
வாகன உரிமையாளர்களுக்கு மோட்டார் காப்பீட்டுத் திட்டங்களை வழங்கும் போது காப்பீட்டு நிறுவனங்களால் அளிக்கப்படும் சலுகைக் காலம் 30 நாட்களாகக் குறைக்கப்படும் என்று இலங்கை காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணைக்குழு (IRCS) அறிவித்துள்ளது.
இந்தத் திருத்தம் மே 1 முதல் அமுலுக்கு வரும் என்று ஆணைக்குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தற்போது, வாகன உரிமையாளர்கள் தங்களது காப்பீட்டுத் தொகையைச் செலுத்துவதற்கு 60 முதல் 90 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்பட்டு வந்துள்ளது.























