• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜப்பானில் மனைவியைக் கொன்று Insinerator வீசிய கணவன்

ஜப்பானின் ஹொக்கைடோ நகரத்தில் உள்ள அசாஹியாமா மிருகக்காட்சிசாலையில் பணிபுரியும் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், தனது மனைவியைக் கொலை செய்து, அவரது உடலை அங்கிருந்த கழிவு எரிமூட்டியில் (Insinerator) வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் 24-ஆம் திகதி இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. முன்னதாக, ஏப்ரல் 23-ஆம் தேதி அந்தப் பெண் காணாமல் போனதாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக அவரது கணவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, சடலத்தை மறைத்தல், அழித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலிசார், எரிமூட்டி அமைந்துள்ள பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பிட்ட அந்த மிருகக்காட்சிசாலையானது பராமரிப்புப் பணிகள், கோடைக்கால முன்னேற்பாடுகளுக்காக ஏப்ரல் 8 முதல் 28 வரை மூடப்பட்டிருந்தது. எதிர்வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி 'கோல்டன் வீக்' விடுமுறையை முன்னிட்டு பூங்காவை மீண்டும் திறக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

தற்போது அங்கு நடைபெற்று வரும் காவல்துறை விசாரணை, தேடுதல் பணிகளால், திட்டமிட்டபடி பூங்காவைத் திறப்பதா வேண்டாமா என்பது குறித்து நகர நிர்வாகம் ஆலோசித்து வருகிறதாக கூறப்படுகின்றது. 
 

Leave a Reply