ரஜினிக்கு மகனாக நடிக்கும் முன்னணி மலையாள நடிகர்
சினிமா
நெல்சனின் ‘ஜெயிலர்-2' படத்தை முடித்த கையுடன், சிபி சக்ரவர்த்தி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த்.
கமல்ஹாசன் இந்த புதிய படத்தை தயாரிக்கிறார்.
இந்நிலையில் இந்த படம் குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்த படத்தில் ரஜினிகாந்தின் மகனாக மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான பசில் ஜோசப் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், ''நான் ஒரு பெரிய படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறேன். தற்போது அதன் விவரங்களை தெரிவிக்க முடியாது'' என்று பாசில் ஜோசப் கூறியதும் கவனிக்கத்தக்கது.
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்தில் பசில் ஜோசப் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.






















