• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரவி மோகனின் வாழ்க்கையை நான் கெடுத்தேனா..? வீடியோ மூலம் ஆதங்கத்தை கொட்டிய பாடகி கெனிஷா

சினிமா

நடிகர் ரவி மோகன், மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வழங்கக்கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதனிடையே, ரவி மோகன் தனது மனைவியை பிரிவதற்கு ரவிமோகனின் தோழி கெனிஷா தான் காரணம் என குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இதுதொடர்பாக பல மாதங்களாக கெனிஷா மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதற்கு அவர் எந்த பதிலும் அளிக்காமல் இருந்த வந்தார்.

இந்த நிலையில், கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 வீடியோக்களை வெளியிட்டு, என்னை விமர்சிப்பதற்கு முன்னர் என்னை யார் என்று தெரிந்து கொண்டு அதன் பின்னர் விமர்சியுங்கள். ரவி மோகன் குடும்பத்தை நான் கெடுத்தேனா.. உங்களுக்கெல்லாம் அறிவே இல்லையா... என்று கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் வீடியோவில் தனது நான்கு வயதில் இருந்தே குடும்ப உறுப்பினர்களால் துன்புறுத்தப்பட்டதாகவும், தனது பெற்றோர் இருவரையும் இழந்ததாகவும், கொடுமை நிறைந்த இளம் வயதுத்திருமணத்தில் ஏற்பட்ட துயரம் குறித்தும், குடும்ப வன்முறையின் விளைவாக ஏற்பட்ட கருச்சிதைவு குறித்தும் கூறியுள்ளார். இந்த துயரங்களில் இருந்து மீள்வதற்கே பல போராட்டங்களை சந்தித்தேன். அம்மா, அப்பா, குழந்தை என அனைத்தையும் இழந்த நான், ரவி மோகனின் குடும்பத்தை கெடுக்க நினைப்பேனா?

மேலும், ரவி மோகனைச் சுற்றியுள்ள சர்ச்சைக்கு நேரடியாகப் பதிலளித்த கெனிஷா, அவர் தனது வாழ்க்கையில் ஒரு கடினமான காலகட்டத்தில் சிகிச்சைக்காக தன்னை அணுகியபோதுதான் தங்களது உறவு தொடங்கியது என்று கூறினார். ரவி மோகன் ஒன்றும் குழந்தை இல்லை. அவரது வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு எடுக்கக்கூடியவர் அவர்தான். அப்படி இருக்கும்போது என்னை ஏன் இதில் இழுக்கிறீர்கள்? சமூகத்தில் மக்களின் உண்மையான பிரச்சனைகள் ஏராளம் உள்ளன. அவற்றைப் பற்றி பேசுங்கள் என்று கூறியுள்ளார். 
 

Leave a Reply