யாழ் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல் - மூடப்படும் வீதி
இலங்கை
யாழ்ப்பாணம், சுன்னாகம் - புத்தூர் வீதி எதிர்வரும் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் மூடப்பட்டு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை வடக்கு தொடருந்து வழி மற்றும் பணிகள் திணைக்கள பொறியியலாளர் G.K சதுரெனோ அறிவித்துள்ளார்.
சுன்னாகம் - புத்தூர் வீதியில் அமைந்துள்ள தொடருந்து கடவை மார்க்கத்தை அவசரமாகத் திருத்தம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், கடவை நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி வரை மூடப்படும்.
அதனால் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் போக்குவரத்துக்கு மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





















