• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் ஈழத் தமிழர்கள் இருவர் உட்பட 4 பேர் அதிரடியாக கைது

கனடா

கனடாவில் திருடப்பட்ட வாகனங்களை மீண்டும் விற்பனை செய்ததாக முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இரண்டு தமிழர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிராம்ப்டனைச் சேர்ந்த 32 வயது மற்றும் 34 வயதான தமிழ் நபர்கள் இருவர் ஒன்டாரியோ மாகாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைக்கு “டெயில்விண்ட் திட்டம்” (Project Tailwind) எனப் பெயரிடப்பட்டிருந்தது.

திருடப்பட்ட வாகனங்களின் அடையாள மற்றும் பதிவு எண்களை மாற்றி, அவற்றை மோசடியாக மறுபதிவு செய்து விற்பனை செய்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

விசாரணைகளின் போது, ஒன்டாரியோ மாகாணத்தின் வாகனப் பதிவு செயல்முறைக்குத் தேவையான முக்கிய ஆவணங்கள் முறைகேடாகப் பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டதாக புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மேலும், இந்த மோசடி நடவடிக்கைகளில் ஒன்டாரியோ அரசாங்க ஊழியர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், அதுகுறித்த மேலதிக விசாரணைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கைது செய்யப்பட்ட நால்வர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஒன்டாரியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply