வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினர் போராட்டம்
இலங்கை
சம்பள முரண்பாடு உள்ளிட்ட இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினர் இன்று தொடக்கம் காலவரையறையற்ற பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
தங்களது கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் இதற்கு முன்னர் பலசுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், அதில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படாத காரத்தினால் இந்த பணிப்பகஸ்கரிப்பினை ஆரம்பித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.























