திரையரங்கில் சாமியாட பணம் கொடுக்கப்பட்டதா? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்
சினிமா
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி கடந்த 15-ஆம் தேதி வெளியான திரைப்படம் கருப்பு. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான நிலையில், கருப்பு திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தெய்வீக காட்சிகள் நிறைந்த படம் என்பதால், திரையரங்கில் ரசிகர்கள் சாமியாடிய சம்பவங்களும் அரங்கேறின.
இந்த நிலையில், திரையரங்கில் சாமியாடுவதற்கு ரசிகர்களுக்கு படக்குழு சார்பில் பணம் கொடுக்கப்பட்டதாகவும், இது திட்டமிட்டு செய்யப்பட்ட ஒன்று என்றும் இணையத்தில் வெகுவாக பேசப்பட்டது.
இந்த நிலையில், திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி சாமி ஆடுவதற்கு தயாரிப்பு நிறுவனம் தரப்பில் பணம் கொடுக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது பேசிய அவர், "தியேட்டரில் சாமி ஆடுவதற்கு தயாரிப்பு நிறுவனமே ணம் கொடுத்து ஆள் அனுப்பியிருக்கும் என சில பேர் கூறுகிறார்கள்; எங்களால் இவ்வளவு பட்ஜெட் செலவு செய்து ஆள் அனுப்ப முடியாது.
அது படத்தின் பட்ஜெட்டை விட அதிகமாக இருக்கும்,மக்களே இந்த படத்தை அவர்களுடைய படமாக நினைத்து கொண்டாடுவதுதான் ரொம்ப ஸ்பெஷலாக இதை மாற்றி இருக்கிறது,” என்று தெரிவித்தார்.






















