• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு பயந்து நீக்கப்பட்ட கண்ணதாசன் பாடல் - கடைசி நேரத்தில் துணிந்து சேர்த்த இயக்குனர் ஸ்ரீதர்

சினிமா

எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு பயந்து நீக்கப்பட்ட கண்ணதாசன் பாடல்; கடைசி நேரத்தில் துணிந்து சேர்த்த இயக்குனர் ஸ்ரீதர்: எவ்ளோ பெரிய ஹிட் தெரியுமா?

'எதற்கும் இது பற்றி எம்.ஜி.ஆரிடம் கேட்போம். அவருக்கு ஆட்சேபனை இருந்தால், அது பற்றி பிறகு யோசிக்கலாம்' என்று முடிவு செய்தார் இயக்குநர் ஸ்ரீதர்.

எம்.ஜி.ஆர். இப்படி சொன்னதால் ஸ்ரீதரின் குழப்பம் இரண்டு மடங்கு ஆகியது. என்ன முடிவு எடுப்பது என்று அவருக்கே தெரியவில்லை. இந்த குழப்பமான சூழலில், உரிமைக் குரல் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களை அழைத்துப் பேசினார் ஸ்ரீதர்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர் எம். ஜி. ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்). அவரின் ஆஸ்தான கவிஞராக கண்ணதாசன் இருந்தார். எம்.ஜி.ஆருக்காகக் கண்ணதாசன் எழுதிய காதல், சோக, தத்துவப் பாடல் அனைத்தும் ஹிட். இந்த சூழலில் இருவருக்கும் இடையில் உரசல் ஏற்பட்டது. அப்போது நடந்த நிகழ்வை சித்ரா லட்சுமணன் பின்வருமாறு விவரிக்கிறார்:-

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடிக்க உரிமைக்குரல் படத்தை இயக்குநர் ஸ்ரீதர் ஆரம்பித்த போது, எம்.ஜி.ஆருக்கும் கண்ணதாசனுக்கும் இடையே உறவு அவ்வளவு சீராக இல்லை. ஆனால், ஸ்ரீதருக்கோ கண்ணதாசன் - எம்.எஸ் விஸ்வநாதன் என்றால் உயிர். அவருடைய எல்லா படங்களுக்கும் கண்ணதாசன் தான் பாட்டு, விஸ்வநாதன் இசை. எம்.ஜி.ஆருக்கும் கண்ணதாசனுக்கும் உறவு சரியில்லாத சூழலில், அவரை வைத்து எப்படி பாட்டு எழுதுவது என தவித்தார் இயக்குநர் ஸ்ரீதர்.

'எதற்கும் இது பற்றி எம்.ஜி.ஆரிடம் கேட்போம். அவருக்கு ஆட்சேபனை இருந்தால், அது பற்றி பிறகு யோசிக்கலாம்' என்று முடிவு செய்தார் இயக்குநர் ஸ்ரீதர். பாடல் எழுதுவது பற்றி எம்.ஜி.ஆரிடம் இயக்குநர் ஸ்ரீதர் கேட்டபோது, எம்.ஜி.ஆர் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்பதை வெளிப்படுத்துகிறார். தாராளமாக கண்ணதாசனின் எழுத்தை பயன்படுத்துங்க என்றும் அவர் கூறுகிறார். எம்.ஜி.ஆரே இப்படி சொன்னதால், எம்.எஸ் விஸ்வநாதன் இசையில், கண்ணதாசனின் வரியில் 'விழியே கதை எழுது' என்ற பாடலும், ஆம்ளைங்களா நீங்க ஆம்ளைங்களா... என்ற பாடலும் பதிவாகியது.

இந்தப் பாடல்களை கேட்ட எம்.ஜி.ஆர் அவை அற்புதமாக இருக்கிறது என்று பாராட்டினார். அவரது பாராட்டை கேட்ட இயக்குநர் ஸ்ரீதர் பிரச்சனை தீர்ந்தது என நினைத்தார். இந்தக் காலக் கட்டத்தில் மொரிஷியஸ் தீவில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு சென்ற எம்.ஜி.ஆர், அங்கிருந்து கென்யா சென்றார். அப்போது 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு' என்கிற திரைப்படம் தயாரிப்பதாக இருந்தது. இதற்காக படப்பிடிப்பு தளத்தை பார்க்க சென்றார் எம்.ஜி.ஆர். அவருடன் ஆர்.எம் வீரப்பன், இதயம் பேசுகிறது மணியன் உடன் சென்றனர்.

இப்படியான சூழலில், எம்.ஜி.ஆர் பற்றி கண்ணதாசன் இங்கு காரசாரமாக கட்டுரை எழுதி இருந்தார். இதனைப் பார்த்து பெரிதும் ஆச்சரியப்பட்டார் இயக்குநர் ஸ்ரீதர். ஏனெனில், அந்த நேரத்தில் தான், கண்ணதாசன் எம்.ஜி.ஆருக்காக எழுதிய பாடல்களை படமாக்கும் பணியில் இருந்தார். 'எம்.ஜி.ஆர் இது பற்றி கேட்டால் என்ன செய்வது?' என்று குழம்பிப் போன ஸ்ரீதர் எம்.ஜி.ஆரிடமே கேட்கலாம் என முடிவு செய்தார். அப்போது எம்.ஜி.ஆர், 'இந்த சூழலிலும் கூட கண்ணதாசன் பாடல்களை நீங்கள் பயன்படுத்துவதில் எந்த எந்த ஆட்சேபனையும் இல்லை' என்று கூறினார். ஆனால், 'என்னை கண்ணதாசன் தொடர்ந்து விமர்சித்து வருவதால், அவருடைய பாடல்களை பயன்படுத்தினால் என்னுடைய ரசிகர்கள் திரையரங்குகளில் கலாட்டா செய்வார்கள் என நீங்கள் நினைத்தாலோ, அவருக்குப் பதிலாக வேறு ஒரு பாடலாசிரியரை நீங்கள் பயன்படுத்தினாலோ, அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என கையை விரித்தார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர். இப்படி சொன்னதால் ஸ்ரீதரின் குழப்பம் இரண்டு மடங்கு ஆகியது. என்ன முடிவு எடுப்பது என்று அவருக்கே தெரியவில்லை. இந்த குழப்பமான சூழலில், உரிமைக் குரல் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களை அழைத்துப் பேசினார் ஸ்ரீதர். அவர்கள் இந்தப் பாடல் வேறு ஏதாவது ஒரு படத்தில் வைத்துக் கொள்ளலாம் என்று கூறினர். இதனால், பாடல் எழுதி கண்ணதாசனிடம் பாடலை பயன்படுத்துவது பற்றி கேட்டார் இயக்குநர் ஸ்ரீதர். கண்ணதாசன் ஆட்சேபனை தெரிவிக்காவில்லை. அதனால், வாலியை வைத்து பாடல்களை எழுதி முடித்தார். இதற்கிடையில், எம்.ஜி.ஆர். தனது முடிவை மாற்றினார். கண்ணதாசன் எழுதிய அதே பாடல்களை படத்தில் வைக்க சொன்னார். இதையடுத்து அதனை படமாக்கினார் இயக்குநர். 'விழியே கதை எழுது' பாடலை கனவுப் பாடலாக வர வேண்டும் என விநியோகஸ்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அப்படியே அதனை மாற்றி அமைத்தார் இயக்குநர் ஸ்ரீதர். திரையரங்கில் வெளியாகும் போது பாடல் படு ஹிட் அடித்தது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்

தமிழச்சி கயல்விழி

Leave a Reply