• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஹோர்மூஸ் நீரிணை ஊடாக சீனா செல்லும் இரு கப்பல்கள்

ஹோர்மூஸ் நீரிணை ஊடாக பாகிஸ்தான் மற்றும் சீனாவை நோக்கி இயற்கை எரிவாயுவுடன் இரண்டு கப்பல்கள் பயணிப்பதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடல்வழி கண்காணிப்பு தரவுகளை மேற்கோள் காட்டி, இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக, குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 'புவைரித்' (Fuwairit) என்ற கப்பல் நாளை பாகிஸ்தானில் தனது சரக்குகளை இறக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கப்பல் கடந்த மார்ச் மாதத்தில் கட்டாரில் சரக்குகளை ஏற்றியிருந்ததாக கூறப்படுவதுடன், இரண்டாவது கப்பலான 'அல் ரய்யான்' (Al Rayyan) கப்பலும் ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்துவிட்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த கப்பலும் கட்டாரில் சரக்குகளை ஏற்றியதாக கூறப்பட்டுள்ளது. கடந்த மே 22 ஆம் திகதி, அந்த கப்பல் இறுதியாக வளைகுடா பகுதியில் அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த கப்பல் தற்போது ஓமன் மற்றும் ஈரானைப் பிரிக்கும் கடற்பகுதியில் நீரிணைக்கு வெளியே உள்ளதாகவும், எதிர்வரும் ஜூன் மாதம் 27 ஆம் திகதி சீனாவை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply