• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கென்யா பாடசாலை தீ விபத்தில் 16 பேர் பலி - 8 மாணவிகள் செய்த விபரீத செயல் அம்பலம்

கென்யாவில் உள்ள பெண்கள் பாடசாலையில் 16 மாணவிகள் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 8 மாணவிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மாணவிகள் மற்றும் ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் சி.சி.டி.வி. காட்சிகளின் தடயவியல் ஆய்வுக்குப் பின்னர் தீ திட்டமிடப்பட்ட விபத்து என, கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கைது செய்யப்பட்ட 8 மாணவிகள் இந்த அனர்த்தத்துடன் தொடர்பு கொண்டவர்கள் என அந்த நாட்டு பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து, விசாரணைகள் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ அனர்த்தம் குறித்து தகவல் வெளியிட்டுள்ள அந்த நாட்டு கல்வி அமைச்சர் ஜூலியஸ் ஒகாம்பா, முதற்கட்ட ஆய்வில், விடுதியில் நெரிசல் மற்றும் அவசர காலத்தில் வெளியேறும் கதவு பூட்டப்பட்டிருந்தமையே தீ பரவலுக்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர, பாடசாலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பல மீறல்கள் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தீ பரவலுக்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் ஜூலியஸ் ஒகாம்பா குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply