நெடுந்தீவில் கடற்படையினருக்கு 1 ஏக்கர் காணி வழங்குவது தொடர்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமளிதுமளி
இலங்கை
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (19) யாழ் மாவட்ட செயலகத்தில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது, காணி விடுவிப்பு தொடர்பாக ஆராய்ந்தனர்.
நெடுந்தீவில் கடற்படையினருக்கு 1 ஏக்கர் அரச காணி வழங்கப்படுவது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே, பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் காணி வழங்குவது தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் எங்களுக்கு அறிவிக்காது எவ்வாறு வழங்க முடியும்.
எப்போது கூட்டம் நடைபெற்றது. எப்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என கேள்விகளை எழுப்பினார்.
அதன் போது, நெடுந்தீவு பிரதேச செயலாளர் காணி பயன்பாட்டு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு, தீர்மானம் எடுக்கப்ட்டதாகவும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலும், காணி விவகாரம் முன்வைக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றும் தெரிவித்தார்.
அதனை ஏற்க மறுத்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இரகசியமாக கூட்டம் நடத்துவது தவறு மக்கள் பிரதிநிதிகள் அழைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த போது, தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளரும, வடமராட்சி கிழக்கு கடற்றொழில் சமாசங்கள் சார்ந்த நபர் குறுக்கிட்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை , கடந்த அரசாங்கங்களிலும் நீங்கள் இருந்துள்ளீர்கள் ஏன் இப்போது கேளிவி கேட்கின்றீர்கள் என கேள்வி எழுப்ப, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி யை தேவையற்ற வார்த்தைகளை கூறியதால், அங்கு வாக்குவாதங்களும், வாய்த்தர்க்கம் இடம்பெற்றது.
சில மணி நேரம் அமர்வில் அமளிதுமளி இடம்பெற்றதை தொடர்ந்து, மைக் பெற்றுக் கொள்ளுமாறு ஒருங்கிணைப்பு குழு தலைவர் தெரிவித்ததுடன், பொலிஸாரை சபைக்குள் அழைத்தனர்.
தற்போது பொலிஸார் சபைக்குள் இருக்கும் நிலையில் சபை அமர்வு நடைபெறுகிறது.























