• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அப்படியொரு மிஸ்டர் எளிமை. மிஸ்டர் அமைதி... பஞ்சு அருணாசலம்

சினிமா

ஒருநாள்... கவிஞர் வாலி ஒரு ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் பஞ்சு அவர்களைப் பார்த்து ‘என்னய்யா பஞ்சு... நீரே படம் தயாரிச்சு, நீரே பாட்டெல்லாம் எழுதிட்டா, எங்க பொழப்பு என்னாகறது?’ என்று கிண்டலாகக் கேட்டார் வாலி. ‘சரிண்ணே... நம்ம படத்துல தொடர்ந்து நீங்க எழுதுங்கண்ணே. இப்ப எடுக்கப் போற படத்துல ரெண்டு பாட்டு எழுதுங்க. அதுக்கு அஞ்சு பாட்டுக்கு உண்டான சம்பளம் என்னவோ தந்துடுறேன்’ என்றார் பஞ்சு அருணாசலம். ‘ஏன் முழுசா தரமாட்டியா?’ என்று கேட்க, ‘சரிங்கண்ணே... நீங்களே இந்தப் படத்துல எல்லாப் பாட்டும் எழுதுங்க’ என்றார். அப்படியே கொடுத்தார். வாலியும் எழுதினார். பாடல்கள் மொத்தமும் பட்டையைக் கிளப்பின. அந்தப் படம்... பஞ்சு அருணாசலம் தயாரித்த ‘வைதேகி காத்திருந்தாள்’. அப்படத்தில் ஒரு பாடலை தவிர மற்ற அனைத்து பாடல்களையும் கவிஞர் வாலி எழுதினார்

தமிழ் சினிமா ரசிகர்கள் பலருக்கும் கூட, ‘பஞ்சு அருணாசலம் எப்படி இருப்பார்’ என்பது கூட தெரியாது. அப்படியொரு மிஸ்டர் எளிமை. மிஸ்டர் அமைதி.

ஒரு மனிதர், எல்லோருக்கும் பிடித்தவராக இருப்பது சாத்தியமில்லை. அதுவும் திரையுலகில் சாத்தியமே இல்லை. ஆனாலும் பஞ்சு அருணாசலம் எல்லோருக்கும் இனியர். இவர் பல திரைப்படங்களில் பல வெற்றிப் பாடல்களை எழுதியுள்ளார் குறிப்பாக சொல்லும் படியாக "கலங்கரை விளக்கம்" திரைப்படத்தில் "பொன்னெழில் பூத்தது புது வானில்" என்ற இவர் எழுதிய பாடல் மிகவும் பிரபலமானது.இவர் பணியாற்றிய, கதையை சீர்படுத்திய படங்களை, தயாரித்த படங்களை, வரிசையாக பார்த்தாலே போதும். அது சினிமாவுக்கான வெற்றி ஃபார்முலா என உணர்ந்துவிடலாம்.

பஞ்சு அருணாசலம், சத்தமே இல்லாமல் சாதனைகள் செய்த சகலகலாவல்லவன். அவர் தொட்ட துறைகளும் எட்டிய சிகரங்களும்... இன்னொரு நூற்றாண்டு சினிமாவுக்கான பெருவிருட்சம். பஞ்சு அருணாசலம் விதை நெல்! அவர் உருவாக்கிய படங்களை சினிமா இலக்கணம் என்றும் சொல்லலாம். பஞ்சு அருணாசலம் பாணி என்றும் சொல்லலாம்.

இன்று (9.8.2026) பஞ்சு அருணாச்சலம் அவர்கள் நினைவுதினம். சகலகலா பஞ்சு அருணாசலத்தைப் போற்றுவோம்.

"என் மனத் தோட்டத்து வண்ணப் பறவை சென்றது எங்கே சொல்.... சொல்.

Rukmani Palaniappan

Leave a Reply